Tuesday, October 26, 2004

`சந்திரமுகி' படப்பிடிப்பு தொடங்கியது

சென்னை, அக். 26-

`சந்திரமுகி' படப்பிடிப்பு சென்னையில் உள்ள சிவாஜி கார்டனில் நேற்று தொடங் கியது. ரஜினிகாந்த் டீசர்ட்- ஜீன்ஸ் பேண்ட் - கூலிங் கிளாசுடன் இளமையாக காணப்பட்டார். ஸ்டண்ட் நடிகர்கள் 30 பேருடன் அவர் மோதிய சண்டை காட்சி நேற்று படமாக்கப் பட்டது.

`சந்திரமுகி'

ரஜினிகாந்த் 2 வருட இடை வெளிக்குப்பின், `சந்திரமுகி' என்ற புதிய படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தை பல வெற்றி படங்களை இயக்கிய பி.வாசு டைரக்டு செய்கிறார். சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில், நடிகர் பிரபு தயாரிக்கிறார்.

படப்பிடிப்பு தொடங்கியது

`சந்திரமுகி' படத்தின் தொடக்க விழா பூஜை கடந்த 23-ந்தேதி, சென்னை தியாகராய நகரில் உள்ள சிவாஜிகணேசன் வீட்டில் நடந்தது.

படப்பிடிப்பு, சென்னை ராமா வரத்தில் உள்ள சிவாஜி கார்ட னில் நேற்று தொடங்கியது.

கே.பாலசந்தர்

ரஜினிகாந்தை தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகம் செய்த டைரக்டர் கே.பாலசந்தர், படப் பிடிப்பை தொடங்கி வைப்பதற் காக அங்கு வந்திருந்தார்.

அவர் `கிளாப்' அடிக்க, சிவாஜி யின் மூத்த மகன் ராம்குமார் காமிராவின் `ஸ்விட்ச்சை ஆன்' செய்தார்.

டீசர்ட் - ஜீன்ஸ் பேண்ட்

ரஜினிகாந்த் நீலநிற டீசர்ட்டும், ஜீன்ஸ் பேண்ட்டும், கூலிங் கிளாசும் அணிந்து இளமையாக காணப்பட்டார்.

அவர், ரவுடிகளுடன் மோது வது போன்ற சண்டை காட்சி முதலில் படமாக்கப்பட்டது.

இந்த சண்டை காட்சியை ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் படமாக்கினார்.

ரஜினிகாந்துடன் 30 ஸ்டண்ட் நடிகர்கள் கலந்து கொண்டு நடித்தனர்.

அவர்களையும், 25 குவாலிஸ் கார்கள், ஒரு டெம்போ டிராவ லர் வேனையும் ரஜினிகாந்த் அடித்து துவம்சம் செய்வது போல் அந்த காட்சி படமானது.

அடையாள கார்டு

`சந்திரமுகி' படத்தில் நடிக்கும் நடிகர் - நடிகைகள் உள்பட படப் பிடிப்பு குழுவினர் 150 பேர் களுக்கு அடையாள கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அடையாள கார்டு வைத்திருப் பவர்கள் மட்டுமே சிவாஜி கார் டனுக்குள் அனுமதிக்கப்படு கிறார்கள்.

ஐதராபாத்

தொடர்ந்து சிவாஜி கார்ட னில், `சந்திரமுகி' படப்பிடிப்பு நடைபெறுகிறது.

நவம்பர் 1-ந்தேதி முதல் ஐதரா பாத்தில் படப்பிடிப்பு தொடர் கிறது.

Courtesy : Thinathanthi
http://dailythanthi.com/article.asp?NewsID=145108&disdate=10/26/2004

2 comments:

Anonymous said...

I am happy hear about the shooting started.

Do you all have the Rajini still during the shooting. Pls upload in our site.

Raj

Anonymous said...

Hai fans,
I wish all the best for "ChanDramuKi" film to get an irreplaceable Victory. Also this would be an unbreakable record.

With Regards,
SM.Karchi MSc.,
Udumalpet.