Friday, October 15, 2004

Ananda Vikatan : பரபரப்பின் உச்சத்தில் இருக்கிறார் ரஜினி!

பரபரப்பின் உச்சத்தில் இருக்கிறார் ரஜினி!

டாப் கியரில் கிளம்பிவிட்டது ‘சந்திரமுகி’ பட வேலைகள். அடுத்த மாதம் 15&ம் தேதி ஷ¨ட்டிங் ஆரம்பம். ஏப்ரல் 14 ரிலீஸ் எனத் திட்டம். பட்ஜெட்?! பதினெட்டு கோடி ரூபாயைத் தொடும் என்கிறார்கள்.


எல்லாமே மின்னல் வேகத்தில் நடந்தது. ‘ஜக்குபாய்’ படத்தை எமோஷனலாக அறிவித்த ரஜினி, அதை மேற்கொண்டு நகர்த்த முடியாமல் தவித்தார். ரஜினி விரும்பியதை ரவிக்குமார் ரசிக்கவில்லை. ரவிக்குமார் விவரித்த கதையில் ரஜினிக்கு மாற்றுக்கருத்து இருந்தது. இரண்டு மாதங்கள் டிஸ்கஷன் நடந்தும் எதுவும் தெளிவாகவில்லை. ரஜினியும் ஆன்மிக டூர் கிளம்பிவிட்டார். ஆந்திரா, கர்நாடகா என அலைந்து திரிந்தவருக்கு திடீரெனப் பொறிதட்ட... ஆரம்பமானது ‘சந்திரமுகி’.

பிரபு, பி.வாசு இருவருக்கும் அடித்தது அதிர்ஷ்டம். கேளம்பாக்கத்தில், ரஜினியின் பண்ணைவீட்டில்தான் கதை விவாதம் நடக்கிறது. மலையாளத்தில் வெளியான ‘மணிச்சித்திரத்தாழ்’ படத்தைத் தழுவி, கன்னடத்தில் பி.வாசு எடுத்த ‘ஆப்தமித்ரா’ படம்தான் ‘சந்திரமுகி’க்கு இன்ஸ்பிரேஷன். ஆனால், ரஜினிக்கு ஏற்றமாதிரி கலக்கலாக மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது திரைக்கதை. ‘‘இது ஏதோ சைக்யாட்ரிஸ்ட் டாக்டர் கதைனு ரசிகர்கள் சீரியஸா எடுத்துக்குவாங்க. அப்படியிருக்கக் கூடாது. ஓபனிங்லேயிருந்து க்ளைமாக்ஸ் வரைக்கும் அடி பின்னியெடுக்கிற மாதிரி கலர் ஃபுல்லா பண்ணணும்... ‘பாட்ஷா’ மாதிரி’’ என்றாராம் ரஜினி.
சூப்பர் ஸ்டாரையும் உலக அழகியையும் எப்படியும் ஜோடி சேர்த்துப் பார்த்துவிட வேண்டும் என்று நம்ம கிராஃபிக்ஸ் டீம் ஆசைப்பட்டதன் விளைவு...

படத்தின் ஆரம்பமே அமர்க்களம்தான். டெல்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் என எல்லா மாநிலங்களின் தலைநகரங்களைக்காட்டி அங்கே உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் படுத்துக் கிடப்பார்கள். ‘யாராலேயும் குணப்படுத்த முடியலியே’ என்று டாக்டர்கள் கையைப் பிசைந்தபடியிருக்க, ‘இவங்களைக் குணப்படுத் தணும்னா அதுக்கு ஒரே ஒருத்தர் இருக்கார். அவருதான்...’’ என்று சொல்ல, ரஜினி என்ட்ரி. அதிரடி வைத்தியத்தில் அத்தனை பேரையும் காப்பாற்றுவாராம் ரஜினி.

கடைசியில், சென்னையில் சித்தப் பிரமை பிடித்தவர்போல, பிரபுவின் மனைவி சிம்ரன். பிரச்னை என்ன என்று பல டாக்டர்கள் சோதித்துப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. ‘‘நீங்க எல்லோரும் போங்க. அவர் வந்து காப்பாத்துவாரு’’ என்கிறார் பிரபு. உடனே சுற்றியிருப் பவர்கள், ‘‘ஆமா, அவரு எங்க வர? எப்போ ட்ரீட்மெண்ட் குடுக்க? குடுத்தாலும் எடுபடுமா? அவரு வந்தும் குணமாகலேன்னா?’’ என ஆளாளுக்குக் கேள்விகள். ‘‘அவர் எப்போ வருவார்... எப்படி வருவார்னு யாருக்குமே தெரியாது. ஆனா, வரவேண்டிய நேரத்துல வந்து நிப்பார். இப்போ பாருங்க’’ என ரஜினியின் பிரபல வசனம் சொல்லி, பிரபு அர்த்தத்துடன் சிரிக்க, புயலாக ரஜினி தரிசனம்.

‘‘தாங்க்ஸ் குரு’’ என்று ரஜினிக்கு பிரபு செல்லமாக முத்தம் கொடுக்க... ‘‘அதான் வந்துட்டேன்ல, தாங்க்ஸ் எனக்கில்ல...’’ என்று விரல் உயர்த்தி வானம் காட்டுவாராம் ரஜினி. ‘‘உங்க வாய்ஸ் எடு படலைனு சொன்னாங்களே குரு’’ என்று பிரபு கேட்க, ‘‘இப்போதானே கண்ணா ரியல் ஆட்டமே ஆரம்பம்’’ என பஞ்ச் வைப்பாராம். இவ்வாறாக முதல் ரவுண்ட் டிஸ்கஷனில் ஆரம்பக் காட்சிகள் பேசப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. கிட்டத்தட்ட ‘குரு & சிஷ்யன்’ பாணியில் ரஜினி & பிரபு காம்பினேஷனில் காமெடியில் பின்னப் போகிற படம்.

ரஜினி தன் தோற்றத்தில் மிகக் கவனமாக இருக்கிறார். ‘‘பாபா படத்தில் மீசை இல்லாம, லேசா தாடி வெச்ச முகத்தோட வந்ததை நம்ம ஃபேன்ஸ் ரசிக்கலை. அதனால அழுத்தமா மீசையோட பண்ணிக்கலாம். தேவைப்பட்டா ஃபிரெஞ்ச் தாடி வெச்சுக்கலாம். ஹேர்ஸ்டைல் கிட்டத்தட்ட ‘ராஜாதிராஜா’ ஸ்டைல்ல பண்ணிர லாம்’’ என்று சொல்லியிருக்கிறார் ரஜினி.

எல்லா வேலைகளும் மும்முரமாக நடந்தாலும் முக்கியமான சிக்கல் ‘ஆர்ட்டிஸ்ட் செலக்ஷன்’தான்!

மூன்று மாதங்கள் தொடர்ச்சியான கால்ஷீட் என்பதால் பிரபல ஸ்டார்கள் சிலருக்குத் தயக்கம். இதுவரை முடிவாகியிருப்பது ரஜினி, பிரபு, சிம்ரன் மூவர் மட்டும்தான். காமெடிக்கு வடிவேலுவைக் கேட்க, அவரோ பயங்கர பிஸி. ரஜினிக்கு யார் ஜோடி என்பதில்தான் பெரிய அலசலே நடந்து முடிந்திருக்கிறது. ஆரம்பத்தி லேயே பிரபுவுக்கு ஜோடி சிம்ரன் என்பது முடிவாகிவிட்டது. சிம்ரனும் சந்தோஷமாகவே ஒப்புக்கொண்டார்.

குருவுக்கு ஜோடி? ராணிமுகர்ஜி... மறுபடியும் மனீஷா கொய்ராலா..? ஜோதிகா... கோபிகா என்று பலரையும் யோசிக்க, ரஜினியின் சாய்ஸ்... ஐஸ்வர்யா ராய்!

ஐஸ் எங்கே இருக்கிறார்? மும்பையிலா அல்லது வெளிநாட்டிலா? என்ன பட வேலை? அவர் கால்ஷீட் கிடைக்குமா? எனத் தேடிக் கிளம்பிய வர்களுக்கு அதிர்ச்சி. லண்டனில் இந்திப் படப்பிடிப்பில் இருந்த ஐஸ்வர்யாவிடம், விஷயத்தைச் சொல்ல... ‘‘வாவ்.. ரஜினி சார் படமா? எப்போ பண்றார்?’’ என்றாராம் ஆர்வமாக. ‘‘அடுத்த மாசம் ஷ¨ட்டிங். ஃப்ளாஷ்பேக்லதான் வர்றீங்க. ஒரு வாரம் கால்ஷீட் போதும்’’ என்றிருக் கிறார்கள். ‘‘வெரி ஸாரி. ஏற்கெனவே ஒப்புக்கொண்ட வேலைகள் நிறைய இருக்கே’’ என்று சொல்லி விட்டாராம் ஐஸ்வர்யா ராய்.

தமிழ்நாட்டுக்கு மட்டுமே முகத்தைக் காட்டுவதற்கு ஏழு நாட்கள் செலவழிக்க வேண்டுமா? அந்த நேரத்தில் ஒரு விளம்பரப் படத்தில் நடித்தால்கூட இந்தியா முழுக்க எக்ஸ்போஷர் கிடைக்குமே என்ற ரீதியிலும் அவர் எண்ணுவதாகச் சொல்கிறார்கள். அதுவும் கதாநாயகியாக இல்லாமல், ஒரு கௌரவ பாத்திரமாக நடிக்க அவருக்கு விருப்பம் இல்லையாம்.

போய் வந்தவர்கள் விஷயத்தை ரஜினியிடம் தயங்கியபடியே சொல்ல... ‘‘இல்ல... ஐஸ்தான் சரியா வரும். அவங்க நடிச்சா ஒரு அட்ராக்ஷன் இருக்கும்’’ என்றாராம் தீர்மானமாக.

‘ஜீன்ஸ்’ படத் தயாரிப்பாளர்களுள் ஒருவரான டாக்டர் முரளிமனோகர் தற்போது லண்டனில் இருக்கிறார். ரஜினிக்கும், சிவாஜி குடும்பத்துக்கும் நெருக்கமானவர் என்பதால், இவர் மூலமாகப் பேசிப் பார்க்கலாம் என்றும் நினைக்கிறார்களாம். ‘ஜீன்ஸ்’ சமயத்தில், முரளி மனோகரின் மனைவி டாக்டர் சுனந்தா, தமிழகத்தில் உள்ள முக்கியமான கோயில்களுக்கெல்லாம் ஐஸ்வர்யா ராயை அழைத்துச் சென்று காண்பித்தாராம். சுனந்தாமீது அவருக்குத் தனிப் பிரியம் உண்டு.

எப்படியும் ஐஸ்வர்யா... இல்லையேல் சினேகா என்ற கணக்கோடு ‘சந்திரமுகி’ காகிதத்தில் வளர்ந்து கொண்டேயிருக்கிறாள்.

Couretsy : Ananda Vikatan
http://www.vikatan.com/av/2004/oct/24102004/av0502.htm

No comments: