தலைகால் புரியாத சந்தோஷத்தில் தடுமாறிக்கொண்டிருக்கிறார் வடிவேலு. காரணம்þ ரஜினியின் அன்பான அழைப்புதான்!
பரபரப்பைக் கிளப்பியிருக்கிற ரஜினியின் "சந்திரமுகி' படத்தில் நடிக்க நாயகி முதல் க்ரூப் டான்ஸர் வரை சான்ஸøக்காக ஏங்கித்தவிக்கிறார்கள். இப்படத்தில் காமெடி ரோýல் நடிக்கவும் ஒரு நகைச்சுவை பட்டாளம் போட்டிபோட்டுத் திரிகிறது. இந்நிலையில் வடிவேலுவுக்கு அடித்திருக்கிறது ஜாக்பாட்.
ஆம். "சந்திரமுகி' படத்தில் பட்டை கிளப்புகிற காமெடிக்கு வடிவேலுதான் வேண்டும் என்று ரஜினியே கட்டளைபோட்டு விட்டார். ஆகவே புயல்வேகத்தில் தனது கால்ஷீட் நிலவரங்களை குழப்பமில்லாமல் பிரித்துவைத்து வருகிறார் "வைகைப்புயல்' வடிவேலு. கூடவே ரஜினி பற்றி பார்ப்பவர்களிடமெல்லாம் புகழ்பாடி வருகிறாராம்.
வடிவேலுவுக்கு சுக்ர திசை ஸ்டார்!
Courtesy : Sify.com
http://tamil.sify.com/fullstory.php?id=13593670
No comments:
Post a Comment