ஜாதகத்தால் ‘ஜகா’ ஆன ஜக்குபாய்?!
ரஜினியின் அடுத்த படம் Ôசந்திரமுகிÕ என்ற அறிவிப்பு எத்தனை சூடு கிளப்பியிருக்கிறதோ, அதே அளவுக்கு Ô‘ஜக்குபாய்’ கைவிடப்பட்டதா?Õ என்ற கேள்வியும் ரசிகர்களைக் குடையத் துவங்கியிருக்கிறது. Ôஆமாம், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி தயாரித்து நடிப்பதாக இருந்த ‘ஜக்குபாய்’ டிராப் ஆகிவிட்டதுÕ என்பதுதான் கோடம்பாக்கத்தில் பரவலாகக் கிடைக்கிற செய்தி.
ஆனால், ரஜினி தரப்பிலிருந்து இதற்கு இதுவரை விளக்கமோ பதிலோ இல்லை. அதனாலேயே, ‘ஜக்குபாய் இனி மொத்தமாக ஜகாதான். ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், பிரதானமான காரணம், ரஜினியின் ஜோதிட நம்பிக்கைÕ என்று கோடம் பாக்கத்தில் நம்பவே முடியாத ஒரு தகவல் பரவிக்கிடக்கிறது.
ÔÔதன்னோட ஜாதகத்தையும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஜாதகத்தையும் கொஞ்சம் லேட்டா ஒரு பிரபல ஜோதிடரிடம் ரஜினி காட்டியிருக்கார். Ôஇப்போதைய கிரக நிலைப்படி இரு ஜாதகங்களுக்கும் இணையும் ராசியில்லைÕ என்று அந்த ஜோதிடர் சொல்லி விட்டார். இதை ரவிக்குமாரிடம் எப்படிச் சொல்வது என்று ரொம்பவே தயங்கினார் ரஜினி. ஒருவழியாக, சில நாட்களுக்கு முன் ஒரு மாலை வேளையில் நட்சத்திர ஓட்டலுக்கு ரவிக்குமாரை அழைத்தார் ரஜினி. அவரிடம் பொது வான பல விஷயங்களை மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்த ரஜினி, கிட்டத்தட்ட அதிகாலை நெருங்கும் நேரத்தில் அந்தத் தகவலை வெளியிட்டார். Ôரவி! ‘ஜக்குபா’யைக் கொஞ்சம் தள்ளி வைப்போம்Õ என்று சொல்லிவிட்டு, மின்னலாகக் கிளம்பிவிட்டார்ÕÕ என்கின்றன, கோடம்பாக்கத்தின் செய்தி&கம்&வதந்தி பட்சிகள்!
இது எந்தளவுக்கு உண்மையோ தெரியாது. ஆனால், Ôரவிக்குமாருக்கு பதில் Ôஜக்குபாய்Õ படத்தை பி.வாசு இயக்குகிறார்Õ என்று சினிமா வட்டாரத்தினர் சில நாட்களுக்கு முன்பு பேச ஆரம்பித்தார்கள். கடைசியில் பார்த்தால், படமே வேறு! அதுவும் சிவாஜி புரொடக்ஷன்ஸில்!
கே.எஸ்.ரவிக்குமார்
கே.எஸ்.ரவிக்குமாரை அவரது மொபைல் போனில் நாம் தொடர்பு கொண்டோம். திரும்புகிற பக்கமெல்லாம் அவரிடம் Ôஜக்குபாய் உண்டா, இல்லையாÕ என்றே கேட்டுத் தொணப்பியிருப்பார்கள் போல! விளக்கம் சொல்லியே கடுகடுத்துப் போயிருந் தார் அவர். வழக்கமாக வெடிச் சிரிப்பும் கலகல வார்த்தைகளுமாக பத்திரிகையாளர் களுடன் பேசுகிற அவர், ரொம்பசிக்கன மாகவே பேசினார். அந்த போன் உரையாடலை இங்கே தருகிறோம்.
‘‘வணக்கம் சார்! விகடன்லேர்ந்து பேசறோம்...’’
‘‘ம்...என்ன விஷயம்?’’
‘‘ஜக்குபாய் டிராப் ஆயிடுச்சுனு சொல்றாங்களே..?’’
‘‘ஆமா, இப்போ பண்ணலே!’’
ÔÔஅதுபத்தி விளக்கமா கேட்கலாம்னு...ÕÕ
ÔÔரெண்டு, மூணு நாள் கழிச்சு போன் பண்ணுங்க!’’ ÔÔபடம் டிராப் ஆனதுக்கு ஆளா ளுக்கு ஒரு காரணம் சொல்றாங்க...ÕÕ
ÔÔடிராப்னு உங்களுக்கு யார் சொன்னது?ÕÕ
ÔÔநீங்களே காரணத்தைச் சொல்லிட்டா, வீண் வதந்திகள் பரவாம இருக்குமே...ÕÕ
ÔÔமுதல் பாதிக்கான கதை ரெடி பண்ணிட்டோம். அடுத்த பாதி ரெடியாகலை. திருப்தியா வரலை. பிறகு பார்த்துக்கலாமேனு ரஜினி சார் நினைச்சாரு. அவ்வளவுதான்.ÕÕ
‘‘சரி, ‘ஜக்குபாய்’ கதையோட அவுட்லைன் என்னனு சொல்லுங்களேன்?’’
‘‘கதைய சொல்றதா?! அதெல்லாம் நான் சொல்லக்கூடாதுங்க. ரஜினி சார்தான் சொல்லணும்.ÕÕ
ÔÔஒருவேளை அந்தக் கதையால தேவையில்லாத பிரச்னை வரும்னு ரஜினி நினைச்சாரா?ÕÕ
ÔÔஅந்தப் படம் இப்போதைக்கு இல்லை. ஒருவேளை Ôசந்திரமுகிÕ முடிஞ்சவுடனே அதே கதையை ரஜினி சார் பண்ணலாம்.ÕÕ
ÔÔஅப்புறம்... உங்க ஜாதகம் ரஜினி ஜாதகத்தோட பொருந்தி வராததால் தான் படம் டிராப்னு பேசிக்கிறாங்களே?ÕÕ
ÔÔஎன்னது?! ஏங்க... ஒரு படம் ஓடறதுக்கு கதை நல்லாயிருக்கானுதான் பார்ப்பாங்க. ஜாதகத்தையா பார்ப்பாங்க? ஜாதகத்தை வெச்சா படம் எடுக்க முடியும்? என் ஜாதகமெல் லாம் நல்லாத்தான் இருக்கு. போதும், இன்னும் விளக்கமா பேசணும்னா ரெண்டு மூணு நாள் கழிச்சு போன் பண்ணுங்க. வணக்கம்!’’ என்றார் கே.எஸ்.ரவிக்குமார்.
விளக்கம் கிடைத்துவிட்ட திருப்தியில் நாமும் போனை வைத்தோம்.
ராயப்பேட்டையில் உள்ள சிவாஜி புரொடக்ஷன்ஸ் அலுவலகம் திருவிழா கோலத்துக்கு மாறிவிட்டது. அங்கே முழுக்க முழுக்க Ôசந்திரமுகிÕ பேச்சுத்தான். குஷியாக இருந்தார் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார்.
ÔÔரஜினி சாரேதான் கூப்பிட்டு இந்த சந்தோஷ முடிவைச் சொன்னார். ஸ்வீட் சர்ப்ரைஸ் எங்களுக்கு!’’ என்றவர், ‘சந்திரமுகி’ பற்றி ஆரம்பித்தார். ‘‘இப்போதைக்கு Ôஅவுட் லைன்Õ ரெடியாகியிருக்கு. கதை கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆகிறதை அணுஅணுவா ரசிச்சுக்கிட்டிருக்கேன். கதை விவாதம் நடந்தபோது பல இடங் கள்ல நானே என்னை மறந்து, கைத்தட்டி ரசிச்சேன். ஆக்ஷன், காமெடி மட்டுமில் லாம, ஜனங்களுக்குப் பிடிச்ச மாதிரி பலவிதமான பொழுதுபோக்கு அம்சங் களை அள்ளித் தெளிக்கப் போறோம். அதுல ஒரு காரெக்டரில் பிரபு நடிக்கணும் என்பதையும் ரஜினி சாரேதான் சொன் னார். சேகர் ஜோசப் காமிரா, வித்யாசாகர் மியூஸிக்னு ப்ளான் பண்ணியிருக்கோம். மத்தபடி யார் யார் நடிக்கப் போறாங்கன்றதெல்லாம் இனிதான் முடிவாகணும்.ÕÕ
ÔÔÔசந்திரமுகிÕ என்பது புகழ் பெற்ற Ôதேவதாஸ்Õ காவியத்தில் வருகிற ஒரு பெண்ணின் பெயராக இருக்கிறதே?ÕÕ
பி.வாசு
ÔÔஆமாம். Ôசந்திரமுகிÕ என்ற காரெக்டர்தான் இந்த கதையின் மையம். ஃபேமிலி, எமோஷன்னு பிரமாதமான கதையா வந்திருக்கு. இந்தப் படத்திலே, ரஜினியோட பல்வேறு பரிமாணங் களையும் தமிழ் ரசிகர்கள் பார்ப் பாங்கÕÕ என்று நம்பிக்கையோடு சொன்னார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் பி.வாசு. தான் நடிக்கிற படங்களுக்கு அவ்வளவு சுலபத்தில் இயக்குநரை முடிவு செய்பவரல்ல ரஜினி. கதையும் அப்படித்தான். கதை விவாதம் என்று உட்கார்ந்தால் கணக்கற்ற மாற்றங்களும் அபிப்பிராயங்களும் சொல்பவர். பி.வாசுவைத் தேர்ந்தெடுத்து, அவரது கதைக்கு எப்படி ஓ.கே. சொன்னார் ரஜினி? வாசுவே பேசுகிறார்.
ÔÔகன்னடத்தில் என் னோட Ôஆப்த மித்ராÕவைப் பார்த்துட்டு, ரஜினியே போனில் கூப்பிட்டுப் பேசினார். Ôநான் ÔசேதுÕ படத்தைப் பார்த்துட்டு பாலாவைத் தேடினேன். Ôஆட்டோகிராஃப்Õ பார்த்துட்டு சேரனுக்குப் பாராட்டு சொன்னேன். உங்க Ôஆப்த மித்ராÕ என்னை ரொம்பக் கவர்ந்துடுச்சு. ஃபண்டாஸ்டிக்Õ அப்படின்னார். சட்னு, Ôஉங்களுக்கு ஏத்த மாதிரிகூட கதையிருக்குÕனு நான் சொல்ல, Ôசென்னை வந்ததும் பாருங்கÕன்னாரு.
ராம்குமார்
ரொம்ப நாளைக்குப் பிறகு ரஜினியைச் சந்திச்சேன். கதையைச் சொன்னேன். கண்மூடிக் கேட்டார். பிடிச்சுதா, இல்லையானு ஒரு வார்த்தைகூடச் சொல்லலை. Ôபோன் பண்றேன்Õனு சொல்லிட்டார்.
நாலைந்து நாளைக்கு முன்னாடி குடும்பத்தோடு குருவாயூர் போயிருந்தேன். தரிசனம் முடிச்சு வெளியே வந்தப்போ செல்போன் அடிச்சுது. பிரபு பேசினார். எந்தப் பீடிகையும் போடலை. Ôவாசு, நம்ம சிவாஜி புரொடக்ஷனுக்காக ரஜினி சார் நடிச்சுக் கொடுக்கறார். நீங்கதான் டைரக்டர்Õனு சொன்னார்.
சட்னு கண்ல தண்ணி வந்துடுச்சு. நிமிர்ந்து குருவாயூர் கோபுரத்தைப் பார்க்கிறேன். பேச்சே வரலை கொஞ்ச நேரத்துக்கு.ÕÕ
ÔÔமுடிவான பிறகு ரஜினியைப் பார்த்தீங்களா..?ÕÕ
ÔÔபார்த்தேன். Ôபளிச்Õசுனு சிரிச்சுக்கிட்டே கை கொடுத்தார். திருநீறு நிறைஞ்ச நெத்தியோட இருந்தார். Ôரொம்ப நன்றிÕ என்றேன். Ôஎனக்கெதுக்கு நன்றி? எல்லாமே கடவுள் செய்யறது. அவர் நினைக்கறதை மீறி நடந்துடுமா?Õனு அமைதியா சொன்னார் ரஜினிÕÕ என்ற வாசுவிடம்,
ÔÔகதை..?ÕÕ என்றோம்.
ÔÔஅதெப்படி சொல்லிடுவேன்னு நம்பிக் கேக்கறீங்க?ÕÕ என்று எதிர்க்கேள்வி போட்டுச் சிரித்தார் அந்த Ôசூப்பர் ஸ்டார்Õ இயக்குநர்!
Courtesy : Ananda Vikatan
No comments:
Post a Comment