Sunday, October 31, 2004

சூப்பர் ஸ்டார் ஜோடியாக கேரளத்து லட்டு!

சூப்பர் ஸ்டார் ஜோடியாக கேரளத்து லட்டு!
நயன் தாரா

ஐஸ்வர்யா ராயின் கை நழுவிப்போனஅதிர்ஷ்டம், இப்போ நயன் தாராவுக்கு. சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜோடியாகிறார் இந்தக் கேரளத்து லட்டு! கன்னக்குழியழகு, வீழ்த்தும் விழியழகு, கொலுசுச் சிரிப்பழகு, மினுமினுக்கும் கருங் கூந்தலழகு என வசீகரிக்கிறார் நயன் தாரா. ரஜினியின் புதிய ‘சந்திரமுகி’ நாயகி!


ÔÔரஜினி சார் என்னை செலக்ட் செய்த செய்தி... இன்னும் கனவு மாதிரிதான் இருக்கு. அதிகாலை நேரத்து அழகான கனவு மாதிரி!’’ & கண்கள் பனிக்கச் சிரிக்கிறார் தாரா.

‘‘நயன் தாரான்னா ‘நட்சத்திர கண்கள்’னு அர்த்தமாம். ஆனா, நான் ஒரு சினிமா நட்சத்திரம் ஆவேன்னு நினைச்சுப் பார்த்ததே இல்லை. திரிவில்லாவில், மார்தம்மா காலேஜ்ல ஜாலியா இங்கிலீஷ் லிட்ரேச்சர் படிச்சிட் டிருந்தேன். ஆசைக்கு அப்பப்போ மாடலிங் செய்ய ஆரம்பிச்சேன். காலேஜ்ல என் தோழிகள் நடுவில் நான் ஒரு ஸ்வீட் ஏஞ்சல். திடீர்னு 2002\ல் கேரளாவின் பெஸ்ட் மாடலிங் கேர்ள் அவார்டு எனக்குக் கிடைச்சுது. அவ்ளோதான்... அதிர்ஷ்ட தேவதை அத்தனை கதவுகளையும் ஒருசேரத் திறந்துவிட்டாள்!


கேரள சினிமாவின் டாப் டைரக்டர் சத்யன் அந்திக்காடு என் புகைப்படங்கள் பார்த்து இருப்பார் போலிருக்கிறது. ‘என்ன பொண்ணு, சினிமாவில் ஆர்வம் உண்டா?’னு கேட்டார். எனக்கு மனசுக்குள் ஆயிரம் மத்தாப்பு. ஆனாலும் பயம். எங்கப்பா குரியன்தான் தைரியம் தந்தார். நான் ஹீரோயின் ஆனேன்!ÕÕ கரிய பெரிய விழிகள் ஜொலிக்கப் பேசுகிறார் தாரா.

‘மனசின் அக்கரை’ படத்தில் ஜெயராம் ஜோடி. முதல் படமே சூப்பர் ஹிட். அடுத்ததாக பாசில் சாரின் படம். ‘விஸ்மயிர் தும்பத்து’... மோகன்லாலுக்கு ஜோடியாக. அதுவும் ஹிட். அப்பறம் ஷாஜி கைலாஷின் Ôநாட்டு ராஜாÕ... இதிலும் மோகன்லால் ஜோடி. இப்போ பொண்ணு ஹாட்ரிக் ராணி!


ÔÔஇரண்டே வரு ஷம்... பத்திரிகைகளில் என் புகைப்படங்கள்... டி.வி&க்களில் என் பாடல் கள்னு திடீர்னு நான் கேரளாவின் டார்லிங் ஆகிட்டேன். காவ்யா, நவ்யா, மீரா, ரேணுகானு அழகழகான சினிமா பொண்ணுங்க மத்தியில் இப்போ நானும் ஒரு நட்சத் திரம். எங்கே போனாலும் என்னை அடையாளம் கண்டுபிடிச்சு, கூட்டம் கூடிடறாங்க. ஆனா, எனக்கு சினிமா உலகம் இன்னும் முழுசாப் பழகலை. பெரிய பெரிய டைரக்டர்ஸ், லால் சார் போல ஒரு ஜீனியஸ் இவங்க தயவால் கொஞ்சங்கொஞ்சமா சினிமா கத்துட்டிருக்கேன். ஹய்யோ... என்னமா நடிப்பார் தெரியுமா லால்! ஒரு பார்வை, ஒரு வார்த்தை, ஒரு சிரிப்புனு லால் சார் வந்து நின்னாலே, ஃபிரேம்ல அவ்ளோ பிரமாதமா இருக்கும். இயல்பான நடிப்புதான் எனக்கும் பிடிக்குங்கறதால அவரை என்னோட புரொபஸர் மாதிரிதான் பார்ப்பேன்ÕÕ என்று வெட்கப்படுகிறார்.


நயன் தாராவைத் தமிழுக்கு முதலில் அழைத்து வந்தவர் ஹரி. ‘ஐயா’வில் சரத்குமாருக்கு ஜோடி. திருநெல்வேலி தாவணிப் பெண்ணாக அசத்திக் கொண்டிருக்கிறாராம் தாரா.

ÔÔதமிழ்ப் படம் பண்றது ரொம்பப் பெரிய விஷயம். அதிலும் ‘ஐயா’ படத்தில் எனக்கு ரொம்ப ஹோம்லியான ரோல். ஐஸ்வர்யா ராய் & நந்திதாதாஸ் இவங்க ரெண்டு பேருக்கும் நடுவில் ஒரு லைன் இருக்கும்ல... அப்படியான காரெக்டர்ஸ் செய்யத்தான் ஆசை!’’& கனவுகள் மிதக்கின்றன தாராவின் நயனங்களில்.

‘‘சென்னையிலிருந்து போன் வந்தது.எல்லா தேவதைகளாலும் அன்னிக்கு ஆசிர்வதிக்கப்பட்டேன்னு நினைக்கிறேன். ‘ரஜினி சாருக்கு நீதான் தாரா ஹீரோயின். நவம்பர்ல ஷ¨ட்டிங் ஆரம்பம்’னு சொன்னாங்க. ஹைய்யோ... நான் மிதந்துட்டே இருக்கேன். ரஜினி சாரின் ரசிகை நான். அவர் ஸ்டைல், மானரிஸம் இதெல்லாம் வீட்ல பண்ணி விளையாடுவோம். Ôஜக்குபாய்Õ, Ôசந்திரமுகிÕ பற்றி நியூஸ் வரும்போதெல்லாம் ஆர்வமா படிப்பேன். ஆனால், நானே ரஜினிக்கு ஹீரோயின் ஆனேன் என்பது ஸ்வீட் ஷாக். இதோ சென்னைக்குக் கிளம்பிட்டே இருக்கேன்’’ & தேவதையின் முகத்தில் கோடி மின்னல் கூடிக் கை கொட்டுகிற பிரகாசம்..

‘‘அப்போ தமிழில் ஜோதிகா, சினேகா, த்ரிஷாவுக்கெல்லாம் இனிமேல் நீங்கதான் போட்டியா?’’ என்றால்,

ÔÔஅய்யோ, அவங்க ரொம்ப சீனியர்ஸ். எனக்கு அக்காக்கள் மாதிரி!’’ என்று சிரிக்கிறார்.

ஆகா..!

Courtesy : Ananda Vikatan
http://www.vikatan.com/av/2004/nov/07112004/av0502.htm

No comments: