ரஜினி படமென்றாலே தனி மவுசுதான். அதிலும் 2 ஆண்டுகள் கழித்து ரஜினி வருவதால் "சந்திரமுகி' படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். இந்த எதிர்ப்பார்ப்புதான் படத்தின் ஆடியோ விற்பனை சூடு பிடிக்கக் காரணமாகியிருக்கிறது.
மார்ச் 5-ம் தேதி இப்படத்தின் ஆடியோ கேசட்டுகள், சிடிக்கள் விற்பனைக்கு வந்தன. இருபதே நாள்களில் 1 லட்சத்து 50 ஆயிரம் கேசட்டுகளும் 50 ஆயிரம் சிடிக்களும் விற்பனையாகியுள்ளன.
சமீபத்தில் தமிழ்ப் படங்களின் ஆடியோ விற்பனையில் அதிக வசூல் ஈட்டிய படம், "கில்லி'. ஆனால் அப்படத்தின் சாதனையையும் "சந்திரமுகி' முறியடித்துவிட்டது. "கில்லி' படத்தின் 1 லட்சத்து 75 ஆயிரம் கேசட்டுகளும் 35 ஆயிரம் சிடிக்களும் விற்பனையாகியிருந்தன. இந்த விற்பனை, "கில்லி' படம் திரைக்கு வந்த பின் நடந்தது. ஆனால் "சந்திரமுகி' திரைக்கு வரும் முன்பே ஒன்றறை லட்சம் கேசட்டுகள் விற்பனையாகியுள்ளது.
"கில்லி' படத்துக்கும் வித்யாசாகர்தான் இசையமைத்திருந்தார். அவரது சாதனையை "சந்திரமுகி' மூலம் அவரே முறியடித்திருக்கிறார்.
"ரஜினி படம் என்பதால் படம் திரைக்கு வரும் முன்பே கேசட்டுகள் விற்பனை சூடு பிடித்துள்ளது. படம் வெளிவந்தபின் கண்டிப்பாக விற்பனை இன்னும் அதிகரிக்கும்' என்கிறார் ஏபி இண்டர்நேஷனல் (அனக் ஆடியோ) ஆடியோ நிறுவனத்தைச் சேர்ந்த சஞ்சய்.
"50ஐ தாண்டினாலும் அவர்தான் சூப்பர் ஸ்டார் என்பதை "சந்திரமுகி'யின் கேசட் விற்பனை எடுத்துக்காட்டுகிறது' என ரஜினியைப் புகழ்கிறது பட வட்டாரம்.
Courtesy : Dinamani.com
1 comment:
Its no surprise, super star brand always sells
Post a Comment