தமிழ்புத்தாண்டை புத்துணர்ச்சியாய் கொண்டாட சூப்பர் ஸ்டார் தந்த பரிசுதான் சந்திரமுகி. வரும் புத்தாண்டிலிருந்து அடுத்த புத்தாண்டு வரை சந்திரமுகி நாடெங்கும் பேசுப்படட்டும். சந்திரமுகி - புதிய வேகத்துடன், புதுப் பொலிவுடன்!
Tuesday, March 08, 2005
அவரோ சூப்பர் ஸ்டார்... நானோ சின்னப் பொண்ணு!
நயன்தாரா... ரஜினியின் ‘சந்திரமுகி’ நாயகி!
கோடம்பாக்கமே கவனிக்கிற பெண், குஷியில் கொஞ்சம் மெருகேறி இருக்கிறார்.
‘‘என் வாழ்க்கையில இது ரொம்ப சந்தோஷ மான காலம். இரண்டு வருஷத்துக்கு முன்னால் கேரளா வில் சாதாரணமா இருந்த பொண்ணு நான். இப்போ மோகன்லால், மம்மூட்டி, ஜெயராம்னு மலையாள டாப் ஹீரோக்களுடன் நடிச்சு, தமிழில் சுப்ரீம் ஸ்டார், சூப்பர் ஸ்டார்னு போயிட்டிருக்கேன். அப்பா, அப்படி ஒரு அதிர்ஷ்டக் காத்து!’’ | பெரிய கண்களில் பரவச மின்னல்கள்!
‘‘ரஜினி சார் கிரேட் மேன்! சுறுசுறுப்பு, பரபரப்பு மாதிரி வார்த்தை களுக்கு அவரை உதாரணமா சொல்லலாம். அதைவிட அழகு அவரோட எளிமை. எட்டு மணிக்கு ஷ¨ட்டிங்னா ஆறு மணிக்கே ஸ்பாட்டுக்கு வந்து அமைதியா ஒரு ஓரத்தில் உட்கார்ந்திருப்பார். அவருக்கான ஸீன் இல்லைன்னாக்கூட ஸ்பாட்டுக்கு வந்து என்ன வேலை செய்றாங்கனு வேடிக்கை பார்த்துட்டிருப்பார். அவர் சூப்பர் ஸ்டார். நானோ சின்னப் பொண்ணு. ஆனா, அந்தப் பயமோ,பதற்றமோ வந்துடாம சும்மா ஏதாவது ஜோக்கடிச்சு ஜாலி பண்ணி எல்லாத்தையும் ஈஸியாக்கிடு வார்!’’ என்கிறார் சந்தோஷமாக.
‘‘சந்திரமுகியில் நீங்க என்ன பண்றீங்க?’’
‘‘துர்கா என்னோட பேர். தழையத் தழையக் கட்டின சேலையோட, ரொம்ப ஹோம்லியா, கலக்கலா வர்றேன். அதுக்கு மேலே சொல்லக் கூடாது. ராஜ ரகசியம்!’’
‘‘எப்படிங்க இவ்ளோ அழகா இருக்கீங்க?’’
பட்டென்று நெஞ்சில் கை வைக்கிறார். ‘‘மனசு! எனக்கு மனசுல எதையுமே வெச்சுக்கத் தெரியாது. ஒரு விஷயம் பிடிக்கலையா... உடனே ஸாரி சொல்லிருவேன். என் கேரக்டர் அப்படி! திடீர்னு கரண்ட் போச்சுனா ‘ஐயோ, கரண்ட் போயிருச்சே!’னு பதறமாட்டேன். தடுமாற மாட்டேன். மெதுவா அந்த இருட்டை ரசிச்சு, மெழுகுவத்தி எங்கே இருக்குனு நிதானமா தேடற டைப் நான். இதுதான் என் அழகின் ரகசியம். மனசு லேசா இருந்தா எப்பவும் அழகாயிருக்கலாம்.’’
‘‘எப்படிங்க இவ்ளோ அழகா பேசறீங்க?’’
‘‘அதுக்கும் இது தாம்ப்பா காரணம்...’’ என்று மறுபடியும் நெஞ்சில் கைவைக்கிறார் நயன் தாரா. அழகான கழுத்தில் ஆடுகிறது ஒரு தங்கத் தாயத்து.
நம் பார்வை அதில் பதிவதைப் பார்த்து, ‘‘இது மலையாள பகவதி அம்மன் கோயில் தாயத்து!’’ என்கிறார்.
அம்புட்டு அதிர்ஷ்டம்!
Courtesy : Ananda Vikatan
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment