‘‘ரொம்ப நாளைக்குப் பிறகு கமல் & ரஜினி படங்கள் ஒரே நாளில் ரிலீஸாகுது..!ÕÕ
ஆமாம்! இது எதிர்பாராமல் நடக்கிற நல்ல விஷயம். வழக்கமா ரஜினியின் படத்தில் அவர்தான் பலம். கதை இரண்டாம் பட்சமா இருக்கும். ‘சந்திரமுகி’யில் கதையும் கனமான விஷயம்னு சொன்னாங்க. ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ & பேருக்கேத்த மாதிரி அதிரடியும் நினைச்சு நினைச்சுச் சிரிக்கிற மாதிரி தரமான நகைச்சுவையும் கொண்ட படம். எங்கள் இருவரின் படங்களும் ரிலீஸாகிறபோது இருதரப்பு ரசிகர்களுக்கும் திருவிழாதான். ஆனால், எங்களுக்குள் மட்டுமில்ல, எங்களின் ரசிகர்களிடையே கூட கசப்பு உணர்வு இருக்காது. நானும் ரஜினியும் வெகுஜாக்கிரதையா எங்களுக்குள் அப்படி க்ளாஷ் எதுவும் வராமப் பார்த்துக்கிட்டோம். இந்தத் தலைமுறை நடிகர்களிடம் அது கொஞ்சம் மாறியிருக்குனு நினைக்கிறேன். சினிமாவிலேயே திட்டிக்கிறாங்களே!
Courtesy : Ananda Vikatan
No comments:
Post a Comment