Saturday, March 12, 2005

கொக்கு பற பற... கோழி பற பற...

அனு.. அக்கா.. ஆன்ட்டி...

கொக்கு பற பற... கோழி பற பற...

Ôசந்திரமுகிÕ படத்தில்...


ஹாலில் சுமதியும் ரமாவும் எதற்கோ சத்தமாகச் சிரிக்க, உள்ளே படித்துக்கொண்டு இருந்த அனு, வெளியே வந்தாள்.

‘‘அதுக்குள்ள படிச்சு முடிச்சாச்சாக்கும்?’’ & சுமதி கடுப்படிக்க,

‘‘கொக்கு பறபற... கோழி பறபற..!’’ & என ஸ்டைலாகப் பாட ஆரம்பித்தாள் அனு.

‘‘ஆரம்பிச்சுட்டா... ‘சந்திரமுகி’ கேசட் வாங்கியாச்சு. இனி அடங்க மாட்டாளே!’’ என்று உதட்டைச் சுழித்தாள் சுமதி.

‘‘ஏய் அனு... கன்னிமரா ஓட்டல்ல நடந்த ‘சந்திரமுகி’ கேசட் ரிலீஸ் விழாவுல, ரஜினி பின்னியெடுத் துட்டாராம்ல?’’ என்று ரமா கேட்டாள்.

‘‘ரஜினி பேச்சுதான் ஹைலைட்!‘‘ என்று அனு அப்படியே ரஜினி குரலில் மிமிக்ரியை ஆரம்பித்தாள்... ‘‘அந்தக் கதை... அது எப்டி எப்டி யோசிச்சாலும் சுத்திச்சுத்தி பாட்ஷா மாதிரியே வந்துது. இன்னொரு பாட்ஷா... அது என்னாலயே பண்ண முடியாதுனுதான் ‘ஜக்குபாய்’ டிராப் ஆச்சு. அந்த நேரத்துல கேரளா போயிருந்தேன். கீதை புக் ஒண்ணு கிடைச்சுது. ‘தம்பிகளைப் பலி குடுத்துட்டு, சொந்தக்காரங்களைப் பலி குடுத்துட்டு, இத்தனை வீரர்களைப் பலி குடுத்துட்டு நான் போர் புரியணுமா, இது தேவையா?’னு அர்ஜுனன் யோசிக்கிறார். அப்ப கிருஷ்ணன் சொல்றார், ‘நீ இப்டி யோசிக்கிறது சரிதான். ஆனா, இப்ப நீ போர் போகலைன்னா, அர்ஜுனன் ஒரு கோழை, பயந்துட்டான்னு எல்லோரும் பேசுவாங்க. அதனால... நீ என்ன ஆகணும்னு நினைக்காதே. என்ன ஆகக் கூடாதுனு நினை. இப்ப நீ கோழை ஆகிடக்கூடாது!’னு உபதேசம் பண்றார். அட்வைஸ்! இந்த இடம்... இந்த இடம் ரொம்பப் புதுசா பட்டது. மனசுல பதிஞ்சுது. பாபா ஓடலை, ஜக்குபாய் எடுக் கலைனு உட்கார்ந் துட்டா வெளியில நம்மளப் பத்தி என்ன நினைப்பாங்கனு யோசிச்சேன். உடனே Ôசந்திரமுகிÕ படம் ஸ்டார்ட் ஆயிடுச்சு.



யானை படுத்தாத்தான் எந்திரிக்கிறது சிரமம். நான் குதிரை... ஓடுற குதிரை! Ôபடையப்பாÕ மாதிரி Ôசந்திரமுகிÕ ஒரு படையம்மா!’’ & அனு மூச்சு விடாமல் பேசி நிறுத்த,

‘‘சபாஷ் அனு! அப்படியே ரஜினிதான்!’’ என்று கை தட்டிப் பாராட்டிய ரமாவை முறைத்த சுமதி டி.வி&யை ஆன் பண்ண, டிஸ்கவரி சேனலில் ஏதோ ஒரு கலர்ஃபுல் குருவி ‘ட்வீக்... ட்வீக்’ என்று கத்திக்கொண்டு இருந்தது.

No comments: