தமிழ்புத்தாண்டை புத்துணர்ச்சியாய் கொண்டாட சூப்பர் ஸ்டார் தந்த பரிசுதான் சந்திரமுகி. வரும் புத்தாண்டிலிருந்து அடுத்த புத்தாண்டு வரை சந்திரமுகி நாடெங்கும் பேசுப்படட்டும். சந்திரமுகி - புதிய வேகத்துடன், புதுப் பொலிவுடன்!
Saturday, April 23, 2005
அமெரிக்காவில் சந்திரமுகி : Junior Vikatan
மியாவுக்கு ஒரு இ\மெயில் வந்தது. அதுவே இந்த இதழுக்குச் செய்தியாகி விட்டது.
அமெரிக்காவில் இருந்து ராஜ்குமார் ராம்மோகன் என்ற நண்பர் ‘சந்திரமுகிÕ கொண்டாட்ட செய்தியைப் படங்களோடு அனுப்பி இருந்தார்.
அங்கேயும் தமிழ் புத்தாண்டை ஒட்டி Ôசந்திரமுகிÕ ரிலீஸ் ஆகிவிட்டது. எப்போதுமே தமிழ் சினிமாவுக்கு அங்கே கொஞ்சம் மவுசு அதிகம்தான். அதிலும் ‘சந்திரமுகி’ படத்துக்கு ரொம்பவே மவுசு! எப்போ எப்போவென காத்திருந்த ரஜினி ரசிகர்கள் கலக்கி எடுத்துவிட்டார்களாம்.
இனி நண்பரின் இ\மெயிலில் இருந்து... அமெரிக்காவின் பல நகரங்களில் படம் திரையிடப்பட்டிருக்கிறது. ‘ரஜினிஃபேன்ஸ்.காம்’ என்ற ரஜினி ரசிகர் அமைப்புதான் இந்தப் படத்தை திரையிட்டிருக்கிறது.
தியேட்டர் வாசலில்...
வார இறுதி நாட்களில் இங்குள்ள திரையரங்குகளில் இந்திய மொழி படங்கள் திரையிடப்படும். இந்திப் படங்கள் என்றால் தியேட்டர் கொஞ்சம் நிறையும். மற்றபடி, தமிழ்ப் படங்களுக்கெல்லாம் பெரிதாக கூட்டம் இருக்காது. தமிழ் முகங்களைப் பார்க்கலாம் என்ற ஆசையில் சிலர் வருவார்கள். அவ்வளவுதான். ஆனால், Ôசந்திரமுகிÕ படத்துக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று பலமொழி ரசிகர்களும் குவிந்து விட்டார்கள். எல்லோருக்குமே ரஜினியின் திருமுகத்தை திரையில் காணும் ஆவல்!
காரிலும் ரஜினி ஸ்டிக்கர்...
‘ரஜினி’ என்ற எழுத்துக்கள் திரையில் ஒளிர்ந்ததும் விசில் விண்ணைப் பிளந்தது. ‘தலைவா’ என்ற கோஷம் தமிழ்நாடுவரை கேட்டிருக்கும். வண்ண ஜரிகைக் காகிதங்கள் பறந்தன. இருப்பது அமெரிக்காவிலா இல்லை, ரசிகர் மன்ற சிறப்புக் காட்சி நடக்கும் மதுரை மாநகரின் தியேட்டரிலா என்ற சந்தேகமே வந்துவிட்டது.
பனியனில் ரஜினி... காத்திருக்கும் ரசிகர் கூட்டம்...
அதேபோல ரஜினியின் முகம் திரையில் தோன்றி யதும் ஆளாளுக்கு திரையை நோக்கி ஓடி, ரஜினி உருவம் பின்னணியில் தெரிய தங்களை போட்டோ எடுக்கச் சொல்லி போஸ் கொடுத்தார்கள். ஒரு கூட்டம் ‘பக்கா’ ரசிகர்களாக சூடம் கொளுத்தி, தேங்காயுடன் திரையை நோக்கி ஓடி ரஜினிக்கு திருஷ்டி சுற்றிப் போட்டது. படம் பார்க்க வந்தவர் களுகெல்லாம் இனிப்பு வழங்கி மகிழ்ந்த ரசிகர்கள், கூடவே ரஜினி படம் பொறித்த டி&ஷர்ட்களையும் வழங் கினர். ‘சந்திரமுகி’யைப் பார்ப்பதற்காக இன்டர் நெட்டில் டிக்கெட் புக் பண்ணி 150 மைல் தூரம் காரில் பயணித்து, காத்திருந்து பார்த்து பரவசப் பட்டு போனவர்கள் ஏராளம்.
திரைக்கு முன்பாக ஒரு போஸ்...
தொழிலில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர், டாக்டர், மாணவர் என்று பல துறைகளில் இருந்தாலும் அன்று ஒருநாள் மட்டும் எல்லோருமே ரஜினி ரசிகர்களாக இருந்தனர்.
அதுதான் ரஜினி!
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
hey guys!!
i saw the movie in the same theater ...it was in North Bergen NJ...it was an electrifying crowd!!
ong serpentine lines and there was an american that asked my friend wat was going on and was really amazed at thalaivars popularity...
lakalakalakalakalakal...
Post a Comment