ரஜினி, கமலுக்கு வாசு கோரிக்கை
இயக்குநர் வாசு.
ரஜினி, கமலுக்கு ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார் இயக்குநர் வாசு.
அது இதுதான்:
"சந்திரமுகி படத்தை தயாரித்த ராம்குமாருக்கும் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கும் முழு திருப்தி. அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். இந்த ஒரு படத்தால் எத்தனையோ நபர்களின் வாழ்க்கையில் மாற்றம் நிகழ்கிறது.
ரஜினியின் ஒரு படத்தை வாங்கும் விநியோகஸ்தர் 15 சிறிய படங்களை வாங்க முடிகிறது. இதனால் அந்த சின்ன படங்களில் பணிபுரிந்த அத்தனை பேரும் லாபம் அடைகிறார்கள். எனவே ரஜினி, கமல் போன்றவர்கள் குறைந்தது ஆண்டுக்கு ஒரு படமாவது நடிக்க வேண்டும்' என்கிறார் வாசு.
No comments:
Post a Comment