Wednesday, April 13, 2005

சந்திரமுகி பற்றி நட்சத்திரங்கள்


ரஜினியின் 152வது படம் "சந்திரமுகி'. "பாபா' படம் எதிர்பார்த்த வெற்றியை அடையாததால் அடுத்த படம் அசத்தலான அதிரடியான படமாக இருக்க வேண்டும் என்று நினைத்த ரஜினி, "படையப்பா' கொடுத்த கே.எஸ். ரவிகுமார் இயக்கதில் ஜக்குபாயை ஆரம்பித்தார். அந்த நேரம் பார்த்து டைரக்டர் பி. வாசுவின் "சந்திரமுகி' பிடித்துப் போக, உடனடியாக கால்ஷீட் கொடுத்ததோடு கூடுதல் கவனம் செலுத்தி நடித்திருக்கிறார்.

படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி பேசும்போது, ""வாழ்க்கையில் மூன்று விஷயங்களின் அருமை நம்மை விட்டுப் பிரிந்துபோன பின்புதான் தெரியும். ஒன்று இளமை. இன்னொன்று ஆரோக்யம். அடுத்தது நல்ல நேரம் என்றவர், ""பாபா படம் சரியாக போகவில்லை. உடனே, "ஓகோ... அண்ணன் ஆடி போய்ட்டார் என்று நினைத்தார்கள். நான் யானை அல்ல குதிரை, யானை விழுந்தால் எழுந்து கொள்ள நேரம் ஆகும். நான் குதிரை என்பதால் உடனே எழுந்து கொண்டேன்'' என்றார்.

"சந்திரமுகி' ஆரம்பித்த நாள் முதலே ரஜினி உற்சாகமாகிவிட்டார். அவருடைய மகள் ஐஸ்வர்யா கல்யாணத்துக்கும் நடுவே படப்பிடிப்புக்கு எந்தத் தடங்கலும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்.

இந்தப் படத்தில் ரஜினியின் "சிகரெட் ஸ்டைல்' இருக்காது. அதேபோல அரசியல் வசனமும் "நோ'.

ஆனால் மும்பை அஞ்சாசன், சென்னை கக்கின்ஸ், கிருஷ்ணன், சிட்டி ஆகிய நான்கு உடை அலங்கார நிபுணர்கள் ஸ்பெஷலாக உழைக்க, ரஜினி படு ஸ்டைலாக வலம் வந்திருக்கிறார்.

குருவாயூரில் கிடைத்த கிஃப்ட்

ரஜினி நடித்த "பணக்காரன்', "உழைப்பாளி', "மன்னன்' ஆகிய படங்களை இயக்கிய டைரக்டர் பி. வாசுவுக்கு இது ஐம்பதாவது படமாம். தான் ரஜினி படத்தை டைரக்ட் பண்ணப் போகிற "சூப்பர்' சமாசாரத்தை குருவாயூர் கோவிலில் இருந்தபோது கேட்டு மகிழ்ந்திருக்கிறார். "சந்திரமுகி' அனுபவம் பற்றி வாசுவிடம் கேட்டோம்.

""சென்சார்ல படம் பார்த்தவங்க படத்தைப் பற்றி பிரமாதமாச் சொன்னாங்க. படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை திரையை விட்டு கண்கள் அகலவில்லை என்றார்கள். அந்த அளவிற்கு படத்தில் டெம்போ இருக்கிறது. ரசிகர்களுக்கு ஏற்ற விருந்தாக இது இருக்கும்.

முதலில் நான் இந்தக் கதையை சிவாஜி பிலிம்ஸ் ராம்குமார்கிட்டே சொன்னேன். அவர் அதைக் கேட்டு அசந்துபோனார். மும்பை போய் சந்தோஷி மூலமா ஹிந்தி நடிகர்களிடம் கதையைச் சொல்லி அங்கே இதை எடுக்கலாம்னு முடிவு செய்தார் ராம்குமார்.

சந்தோஷியிடம் விவரத்தைச் சொன்னோம். அவரும் மார்ச், ஏப்ரலில் எடுக்கலாம் என்றார். இந்தச் சூழ்நிலையில்தான் ரஜினி சாருக்கு "க்ளிக்' ஆயிடுச்சி.

இந்தக் கதை, யார் நடித்தாலும் ஓட வேண்டும் என்ற கண்ணோட்டத்துடன் உருவானது. ஆனால் அதற்கு ரஜினியே அமைந்துவிட்டார். அவர் இந்தப் படத்தில் படு சுறுசுறுப்பாக, பிரமாதமாக நடித்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் அனல் பறக்கும். அந்த அளவுக்கு எடுக்கப்பட்டிருக்கிறது.

ரஜினியின் அழகை இது வெளிப்படுத்தும். படம் முழுக்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கின்ற அளவுக்கு சுவாரஸ்யமான விஷயங்கள் நிறைய இருக்கின்றன.

இது எனக்குத் திடீர்னு கிடைத்த படம். இதில் வேலை செய்தது நல்ல அனுபவம். படுஸ்பீடாக படப்பிடிப்புகள் நடத்தி முடித்தோம். அதேபோல போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகளும் நினைத்ததைவிட வேகமாக நடந்து முடிந்தன. இப்போது பர்ஸ்ட் காப்பி சென்சார் முடிந்துவிட்டது. எல்லோரும் பார்க்கிற அளவுக்கு "யு' சர்ட்டிபிகேட் வழங்கியுள்ளனர்'' என்றார் வாசு பெருமிதத்தோடு.

தண்ணீரும், ஆக்ஸிஜனும் ரஜினி!

வீனஸ் பிக்சர்ஸýடன் சேர்ந்து ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஹிந்தியில் "அமர்தீப்' என்ற படத்தை முதன்முதலாகத் தயாரித்த சிவாஜி பிலிம்ஸ், தனது பொன்விழா ஆண்டாக "சந்திரமுகி' படத்தைத் தயாரிக்கிறது. ஏற்கனவே "மன்னன்' படத்தைத் தயாரித்த பிரபு, இப்போது ரஜினியை வைத்து "சந்திரமுகி'யை தயாரித்திருக்கிறார். படத்தில் செந்தில் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார்.

அவரிடம் "சந்திரமுகி' அனுபவம் பற்றிக் கேட்ட போது, ""எங்க அப்பா எங்களுக்கு விட்டுப் போன சொத்து நட்பு, அன்பு, பாசம். அதுதான் இன்றைக்கு எல்லோரையும் வாழ வைத்திருக்கிறது'' என்று நெகிழ்ச்சியுடன் ஆரம்பித்தார்.

இந்த உலகத்தில் வாழ்வதற்கு தண்ணீர், ஆக்ஸிஜன் தேவை. அந்த தண்ணீரும், ஆக்ஸிஜ'னுமாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிசார். அவர் பர்ஃபெக்ட் ஜென்டில்மேன். அவர் நல்லா இருக்க வேண்டுமென்று எங்கள் குடும்பம் பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கும்.

இந்தப் படத்தில் சரவணன் என்ற கேரக்டரில் ரஜினி சார் நடித்துள்ளார். நான் செந்தில் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறேன். அவர் படத்தில் அடிக்கடி "சரவணன் இருக்க பயமேன்' என்று டயலாக் பேசுவார். கண்டிப்பாக அவர் இருக்கும் வரை எங்களுக்குப் பயமில்லை.

இந்த படம் ஆரம்பித்ததும் முடிந்ததும் எவ்வளவு வேகமாக நடந்திருக்கிறது என்று நினைக்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. சிவாஜி பிலிம்ஸின் பொன்விழா ஆண்டுப் படமாக "சந்திரமுகி' திரைக்கு வருகிறது. இப்படம் வெள்ளிவிழா காணும். அந்த விழாவில் என் அனுபவங்களைப் பேசினால் இன்னும் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்'' என்று கம்பீரமாகச் சொன்னார் பிரபு.

"ஜோதிகா இஸ் எ நைஸ் கேர்ள்'

""ரஜினி சாருடன் ஜோடியாக நடிப்பேன் என்று கனவில்கூட நினைக்கவில்லை'' ஆரம்பித்த நயன்தாரா, இது எனக்குக் கிடைத்த நல்ல அற்புதமான வாய்ப்பு. இந்தப் படம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சூப்பர் அனுபவம் என்று சொல்லலாம். நிறையச் சொல்ல வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. பொருத்தமான வார்த்தைகள் கிடைக்காமல் தவிக்கிறேன்.

இந்தப் படத்தில் எனக்கு மூன்று பாடல்கள். இரண்டு பாடல்களை துருக்கி நாட்டில் படமாக்கி உள்ளனர். என்னுடன் படத்தில் நடித்த ஜோதிகா இஸ் எ வெரி நைஸ் கேர்ல். அவரை எனக்கும், என்னை அவருக்கும் மிகவும் பிடித்துப்போய்விட்டது.

பிரபு சார், டைரக்டர் பி. வாசுசார் என எல்லோரும் கொடுத்த ஒத்துழைப்பை என்னால் மறக்கவே முடியாது. நல்ல யூனிட், அற்புதமான படம். என்றென்றும் நினைவில் நிற்கின்ற அனுபவமாக அமைந்திருக்கிறது "சந்திரமுகி' அனுபவங்கள்'' என்றார் அழகான புன்சிரிப்போடு.

3 comments:

lori said...

Please be careful when you buy tramadol.

Please be careful when you buy Cheap Tramadol.

Please be careful when you Buy Cheap Tramadol.

Please be careful when you buy Tramadol hcl.

Please be careful when you Buy Tramadol online.

Please be careful when you buy Tramadol.

Please be careful when you buy Discount Tramadol.

Please be careful when you buy drug tramadol.

Please be careful when you buy generic Tramadol.

Please be careful when you buy hydrochloride tramadol.

Please be careful when you order tramadol.

Please be careful when you buy Tramadol online.

Please be careful when you buy Tramadol ultram.

Please be careful when you Buy Tramadol Online.

Please be careful when you Cheap Tramadol.

Please be careful when you Buy Cheap Tramadol.

Please be careful when you Tramadol hcl.

Please be careful when you Buy Tramadol.

Please be careful when you Discount Tramadol.

Please be careful when you Order Tramadol.

Please be careful when you Tramadol Online.

Please be careful when buying Tramadol.

Please be careful when you Buy Tramadol online.

Please be careful when you Buy Fioricet Online

Please be careful when you Buy Fioricet online

Please be careful when you buyloss weight

Please be careful when you Buy Tramadol.

Please be careful when buying Tramadol.

Please be careful when buying Tramadol.

Please be careful when buying enlargement penis pill .

Please be careful when buying enlargment penis pill .

Please be careful when buying penis pill .

Please be careful when you
buy tramadol .

Please be careful when buying tramadol .

Please be careful when buying tramadol .

Please be careful when you buy tramadol online .

Please be careful when you buy tramadol .

Anonymous said...

[url=http://community.westcoastsurfmag.com/_Online-Schools-Pre-Law/photo/9193276/2885.html]Courses For Making Money Online[/url] [url=http://my.ktvu.com/_Online-Criminal-Justice-Schools/photo/9191494/6704.html]Apply For Online Classes[/url] [url=http://pasnation.pasmag.com/_Accreditted-Online-Colleges/photo/9193744/94594.html]Degree Occupational Online Program Therapy[/url] [url=http://home.theundergroundcity.com/_Physical-Labs-Online-Learning-University/photo/9193608/22344.html]Actionscripting Online College Courses[/url] [url=http://my.emqtv.com/_Online-College-Versus-Traditional-College/photo/9191565/2448.html]Medication Aide Courses Online Certification[/url]

Anonymous said...

[url=http://edwardross.com.au/members/Check-Virginia-Car-Insurance.aspx]Motor Car Insurance In Singapore[/url] [url=http://avalanche.ca/Forums/members/Bahrain-Car-Insurance/default.aspx]Free Uk Car Insurance Company Information[/url] [url=http://uat.manpowerprofessional.com.au:81/members/A-I-B-Car-Insurance.aspx]Pennsylvania Cheap Car Insurance[/url] [url=http://vista.aero/members/Line-Auto-Insurance-Quotes.aspx]Miami Lakes Florida Car Insurance[/url] [url=http://shoppingconfidential.com/members/Farmers-Car-Insurance-Locations-In/default.aspx]Car Free Insurance Rate[/url]