Thursday, April 21, 2005

Chandramukhi Review by Tamilcinema.com

இளைய தலைமுறை ஹீரோக்களே... நீங்கள் குறி வைத்திருக்கும் சூப்பர் ஸ்டார் நாற்காலி கனவை இன்னும் கொஞ்ச காலத்திற்கு தள்ளி போடுங்கள்! புத்தொளியோடு வந்து விட்டார் ரஜினி. பாடல் காட்சிகளிலும் சரி, சண்டை காட்சிகளிலும் சரி, திணவெடுத்த குதிரையாக துள்ளியிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

இரண்டு வருடங்களாக கதை கேட்டு கடைசியில் சந்திரமுகிக்கு சம்மதம் சொன்னதன் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது. பிசைந்த மாவையே பிசைந்து கொண்டிருக்கும் சரக்கு மாஸ்டர்கள் மத்தியில் வாசு சொன்ன கதை லேசுபட்டதல்ல.

மன்னர் காலத்தில் கட்டிய பாழடைந்த பங்களா ஒன்றை விலைக்கு வாங்கி குடிபோகிறார் பிரபு. அதை வாங்கும் போதே அந்த பங்களாவை வாங்காதே என்று தடுக்கிறார்கள் அத்தனைபேரும். காரணம், அந்த பங்களாவில் சந்திரமுகி என்ற நாட்டிய காரியின் ஆவி நடமாடுவதாக சொல்லப்படுவதுதான். அதையும் மீறி அங்கே தங்குகிறார்கள் பிரபு-ஜோதிகா தம்பதி! நாட்கள் செல்ல செல்ல அந்த சந்திரமுகியாகவே தன்னை கற்பனை செய்து கொள்கிறார் ஜோதிகா. இதற்கிடையில் பிரபுவை கொல்லவும் சதி நடக்கிறது. அப்படி கொல்ல முயன்றது யார் என்பதை கண்டுபிடித்து, ஜோதிகாவையும் மன நோயிலிருந்து விடுபட வைக்கிறார் ரஜினி. எப்படி என்பதை திருப்பமும், திகிலுமாக சொல்லி முடிக்கிறார்கள். மயிர்கால்கள் சிலிர்த்துக் கொள்கிறது!

ரஜினியின் ரவுசுக்கு பஞ்சமில்லாத காட்சிகள் நிறைய! பென்ஸ் காரில் வருவார் என்று அத்தனை பேரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க, மாட்டு வண்டியில் வந்திறங்குகிறாரே, அங்கே ஆரம்பிக்கிறது அவரின் காமெடி ராஜ்ஜியம். துணைக்கு வடிவேலு வேறு. கேட்க வேண்டுமா என்ன? வடிவேலுவின் மனைவி சொர்ணாவிடம் இவர் தமாஷாக பேச, இரண்டு பேருக்கும் வேறு மாதிரி கனெக்ஷன் என்று நினைத்துக் கொண்டு வடிவேலு பதறுவது பகீர். சில ரீல்கள் பெருந்தன்மையாக ஒதுங்கிக் கொள்ளவும் செய்திருக்கிறார் ரஜினி. வினித்-ஜோதிகா காதல் ஜோடியை பிரிக்கும் மன்னராகவும் ரஜினியே நடித்திருக்கிறார். ராகத்தின் நடுவே அவர் சொல்லும் ÔÔலகலகலக...ÕÕ பயங்கரம்!

அந்த பங்களா விஷயத்தில் ஆரம்பத்திலிருந்தே பதறும் வடிவேலு, அங்கே தனியாக மாட்டிக் கொண்டு அல்லாடுகிறாரே... நம் சர்வ நாடியும் விழித்துக் கொண்டு சிரிக்கிறது! வெள்ளையும் சள்ளையுமாக ரஜினியோடு பைக்கில் போய், சேறாபிஷேகத்தோடு திரும்புவது இன்னும் சிரிப்பு.

ஆரம்பத்தில் அடக்கமாக வந்து, கடைசியில் அத்தனை பேரையும் நடிப்பில் விழுங்கி விட்டு போகிறார் ஜோதிகா. சந்திரமுகியாக இவர் மாறுகிற காட்சிகளில் எல்லாம் அந்த கோழிமுட்டை கண்கள் என்னமாய் நடிக்கிறது! மன்னரை தீயிட்டு கொளுத்துகிற அந்த காட்சியை அவர் உட்கார்ந்து ரசிக்கிற அழகே அழகு! ஜோதிகா மாதிரி அழகான ஆவிகள் வாய்த்தால் சுடுகாடுகள் கூட சுற்றுலாதலம் ஆகிவிடும்!

ரஜினிக்கு ஜோடி நயன்தாரா. படத்தில் ரஜினி வேறு வேலை பார்ப்பதால் இவரும் பல ரீல்களில் ஆப்சென்ட்.

வித்யாசாகர் இசையில் Ôதேவுடா தேவுடாÕ ரஜினிக்காக ஒதுக்கப்பட்ட ஃபார்முலா. கொக்கு பற பற... வித்யாசாகரின் ஆர்மோனியப் பெட்டி தந்த வரம். புரியவே இல்லையென்றாலும் அந்த தெலுங்கு பாடல் சூப்பர்.

பொன்னம்பலம் சைசுக்கு ஒரு பாம்பை காட்டுகிறார்கள் அடிக்கடி. ஒரு கட்டத்தில் சபாநாயகர் சொல்லாமலே வெளியேறிவிடுகிறது அதுவும்!

வெற்றி இலக்கை நோக்கியிருந்த ரஜினியின் Ôதந்திரÕமுகி!

-ஆர்.எஸ்.அந்தணன்

3 comments:

Anonymous said...

review summa "NACH"nu irukku.....

padamum nallaa irukku....

superb review...superb film....

Anonymous said...

Hey guys,

I am from Singapore. I watched thalaivar's movie 4 times so far and still want to watch again.Fantastic movie, Thalaivar fight, comedy, songs, style everything superb. He looks young too. The response in singapore is sooo overwhelming,running to full houses till today, its a record. Its always crowded and we have to book the tickets earlier.Wow thalaivar is thalaivar.He is the 1 and only superstar.

Anonymous said...

chandramukhi is super hit mukhi for super star. He should revive JagguBhai and give action pack thriller in it. Bcoz thalaivar never suspend any movie be4 like what other stars normally does. KS Ravikumar & Rajini Sir can fine tune the storyline and give another Paddayappa by Deepavalli.

SuperStar is still our Thalaivar!!