Monday, January 17, 2005

விகடன் : வித்யாசாகரின் துள்ளல்!

Ôவர்ஷா வல்லகி’... என் இசைக்கூடம்...

இப்போதுதான் கம்போஸிங் அறையிலிருந்து வெளியே வருகிறேன். பால்கனியிலிருந்து பார்த்தால் தெருவெல்லாம் ரசிகர் கூட்டம். உள்ளே ‘சந்திரமுகி’ படத்தின் பாடல் தயாராகிறது. ரஜினியின் ரகசிய வருகை வெளியே பரவி, அவர் தரிசனத்துக்காக ஒரு கூட்டம் காத்திருக்கிறது.
ÔÔஹேப்பி வித்யா!ÕÕ


‘‘ஹேப்பி... இது பெரிசா ஹிட்டாகும் வித்யா!’’ |உற்சாகமாக வாலி, பி.வாசு, ராம் குமாருடன் கிளம்பிப் போகிறார் ரஜினி. வாசலில் பரபரப்பு... விசில் ஒலிகள். மின்னலென வெளியேறி, ஒரு பளிச் புன்னகையுடன் கூட்டத்தைக் கும்பிட்டுவிட்டு, காரிலேறிப் பறக்கிறார் ரஜினி.



ஒரு விழாவில் தற்செயலாக டைரக்டர் பி.வாசு சாரைப் பார்த்தேன். Ô‘உங்களுக்கு ஒரு குட் நியூஸ் இருக்கு’Õ எனச் சிரித்துவிட்டுப் போனார். பிறகு, அதை நானும் மறந்து போய்விட்டேன். ஒருநாள் ராம்குமார் என் ஸ்டூடியோவுக்கு வந்திருந்தார். ÔÔசிவாஜி ஃபிலிம்ஸ§க்கு இது 50|வது வருஷம். ஒரு புதுப் படம் பண்றோம். பிரபு நடிக்கிறார். நீங்க மியூஸிக் பண்ணணும்...’’ எனச் சொல்லிக்கொண்டே வந்தார். ‘‘சந்தோஷமா செய்யலாம் சார்’’ என்றேன். ஒரு சின்னப் புன்னகையுடன் என்னைப் பார்த்தவர், ‘‘ஹீரோ ரஜினிகாந்த்!ÕÕ என்றார். எனக்கு அது மிகப் பெரிய சர்ப்ரைஸ்!


நான் ரஜினி சாரை முதலில் சந்தித்ததே ‘அன்னை இல்ல’த்தில் நடந்த ‘சந்திரமுகி’ பட பூஜையில்தான். ‘வித்யாசாகர்’னு யாரோ என்னைக் கூப்பிட்டார்கள். மெதுவாகத் திரும்பிப் பார்த்தால், ரஜினி சார்! ÔÔவணக்கம் வித்யாசாகர். உங்களுக்குத்தான் இதில் ரொம்ப வேலையிருக்கு. உங்க ஸ்டூடியோவுக்கு நானே வர்றேன். நிறைய பேசணும்ÕÕ என்று சிரித்தார்.

சந்திரமுகிக்கு வேறு யாரோதான் மியூஸிக் பண்ணுவதாக இருந்ததாம். ஆனால், ரஜினி சார்தான் என்னைத் தேர்ந்தெடுத்தாராம். ‘‘என் பொண்ணுங்க, அவங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாம், Ôவித்யாசாகர்’னு உங்க பேர் சொன்னதுமே சந்தோஷத்துல தலைகால் தெரியாம துள்றாங்க. அப்படி என்னதான் மாயம் பண்றீங்க?ÕÕனு சிரிச்சார் ரஜினி.

சிம்பிளா இருக்கார். காஷ§வலாப் பழகுறார். ரொம்ப வேகம். இப்பப் பாருங்க, ÔசடசடÕனு மூணு பாட்டு கம்போஸ் ஆயிருச்சு. மாஸ் ஹீரோன்னாலே ரஜினி தான்! ஹீரோயிஸத்துக்கான பில்டப் அவர் படங்களில்தான் பிரபலமாக ஆரம்பிச்சுது.

ஆனால், ‘சந்திரமுகி’ படப் பாடல்களில், அரசியல் சங்கதி, தனிமனிதப் புகழ்ச்சி மாதிரி வழக்கமான விஷயங்கள் வேண்டாம் என்று முடிவு பண்ணிட்டார் ரஜினி சார். இப்போ சின்ன நடிகர்கள்கூட ஹீரோயிஸம்தான் வேணும்னு எதிர்பார்க்கிறப்போ, அந்த ஃபார்முலாவை ரஜினி சாரே பிரேக் பண்றது ரொம்ப ஆரோக்கியமான விஷயம்.

ஓபனிங் சாங் வாலி சார் எழுதறார். சின்ன இடைவெளிக்குப் பிறகு ரஜினி சார் மறுபடியும் ஸ்கிரீன்ல வந்து நிக்கறப்போ, இடி, மின்னல், புயல், மழைனு போட்டுத் தாக்கற ஸ்டைல்ல வரும் பாட்டு. ஒரு வேகத்தோட காத்திருக்கிற அத்தனை ரஜினி ரசிகர்களுக்கும் அது அர்ப்பணம்!

ரஜினி சார் ரொம்ப மாடர்னா யோசிக்கிறார். அவரிடம் ஒரு நல்ல விஷயம் என்னன்னா, தன் கருத்தை யார் மீதும் அவர் திணிப்பதில்லை. என்ன விஷயம்னாலும் கவனமாகக் கேட்கிறார். ஏன் அதைச் செய்ய விரும்பறோம்னு தெரிஞ்சுக்க விரும்பறார். அப்படியே வெளிப்படையா மனசைத் திறந்து வெச்சிருக்கிறார். ‘இந்தப் பாட்டுக்கு யார் டான்ஸ் மாஸ்டரா இருந்தா நல்லாயிருக்கும்?’னு என்னோட அபிப்பிராயம் கேட்கிறார். அவ்வளவு ஆர்வமா, கவனமா ஒரு திருவிழாவுக்குத் தயாராகிறார் ரஜினி சார்.

ஆக்ஷன் தவிர, இது மியூஸிக்கலான சப்ஜெக்ட். படத்தின் ரீ& ரிக்கார்டிங் லண்டனில் பண்ணப்போறோம். Ôசந்திரமுகிÕக்கு சூப்பர் ஸ்டார் இருக்கார். அந்தப் பலமே பெரிய கமர்ஷியல். அதை மியூஸிக்ல அழகுபடுத்த வேண்டிய பொறுப்பு மட்டும் என்னுடையது. அதனோட மதிப்பு எனக்குப் புரியுது. இரண்டு நாட்களுக்கு முன்னால் பாண்டி பஜார் அருகே காரில் வந்துகொண்டிருந்தேன். சரேலென என் காரை ஓவர்டேக் செய்து ஒரு கார் குறுக்கே வந்து நின்றது. காரிலிருந்து இறங்கி வந்தவர், ஒரு பெரிய அதிகாரி போல இருந்தார். ‘Ôகுட்மார்னிங் சார், ‘சந்திரமுகி’ பாட்டெல்லாம் ரெடியா?’’ என்றார். ‘Ôவேலை நடந்துட்டிருக்குங்க’Õ என்றேன். ‘Ôசூப்பரா குத்துப்பாட்டு போடுங்க சார்!’’ என்று சொல்லிவிட்டு, காரைக் கிளப்பிக்கொண்டு போய்விட்டார். எல்லா இடத்திலும் எல்லா ரகத்திலும் ரஜினி சாருக்கு ரசிகர்கள் இருக்காங்க.



நானும் ரஜினி சார்கிட்டே இப்படி ஜனங்க எதிர்பார்க்கறதைச் சொல்லிட்டேன். ரொம்ப ஜாலியாச் சிரிச்சார். அவர் எல்லாத்துக்கும் ரெடியா இருக்கார். எனக்கு ரஜினி மீது இருக்கிற ஆச்சரியம் அவரோட எளிமை. என் ஸ்டூடியோவுக்கு அவர் வந்துட்டுப் போகும்போது சந்தோஷமாகப் போகிறார். அது எனக்கு நிறைவாக இருக்கு. பாடல்கள் பிரமாதமா வந்துட்டிருக்கு. செம திருவிழாவுக்குத் தயாரா இருங்க!

No comments: