Thursday, September 30, 2004

கைகொடுத்த ரஜினி... குஷியான சிவாஜி குடும்பம்...

தமிழ்த் திரையுலகமே பேரணியாகத் திரண்டு கோட்டையில் முதல்வரை சந்திக்கச் சென்று, முதல்வருக்காக காத்திருந்த நேரத்தில், சினிமா பிரமுகர்கள் பலரும் நடிகர் பிரபுவுக்கும் டைரக்டர் பி.வாசுவுக்கும் கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவித்தனர். அதன் அர்த்தம் அடுத்த சில நாட்களிலேயே வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. பி.வாசுவின் இயக்கத்தில் பிரபுவின் தயாரிப்பில் ‘சந்திரமுகி’ என்ற படத்தில் ரஜினி ஹீரோவாகிறார் என்ற ஸ்வீட் நியூஸ்தான் அது.
சிவாஜி ராம்குமார் பிரபு

Ôஇனி வெளிப்படங்களில் நடிப்பதில்லை. சொந்தத் தயாரிப்புதான்’ என்று கடந்த சில வருடங்களாக கொள்கை வைத்திருந்த ரஜினி, அந்த முடிவை மாற்றிக்கொண்டதன் பின்னணி என்ன? ÔÔரஜினிக்கும் மறைந்த சிவாஜிக்கும் இடையிலான உருக்கமான நன்றிக்கடன்தான் அதுÕÕ என்கிறார்கள் சிலர்.

சிவாஜி குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான இவர்களிடம் பேசியபோது, Ôசந்திரமுகிÕ அவதரித்த ஸ்டோரியை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள்.

ÔÔஇப்போது சிவாஜியின் குடும்பம் சொல்லிக்கொள்கிற மாதிரியான பொருளாதார வலுவுடன் இல்லை. அவர்களுக்குச் சொந்தமாக இருந்த தியேட்டர்கள், இன்னும் பிற சொத்துக்கள் எல்லாம் கடந்த சில வருடங்களில் கைமாறியிருக்கின்றன. சென்னை போக் ரோட்டில் இருக்கும் சிவாஜியின் புகழ்பெற்ற Ôஅன்னை இல்லம்Õ பங்களாவும் விற்பனைக்கு வருவதாக செய்திகள் கிளம்பிவிட, சிவாஜி குடும்பத்தினர் மிகக் கடுமையாக எல்லாவற்றையும் மறுத்துவிட்டனர்.

என்றாலும், தொடர்ந்து கசிந்த செய்திகளை ரஜினி கவலையோடு கவனித்துக் கொண்டிருந்தார். சிவாஜி குடும்பத்தினரின் தற்போதைய முக்கிய வருவாய் கேந்திரமான ‘சிவாஜி புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பு நிறுவனமும் பெரிய வளர்ச்சி எதுவும் இல்லாமல் இருப்பதைப் புரிந்துகொண்டார். டி.வி. சீரியல் எடுத்தாவது இக்கட்டை ஈடுகட்டும் பணியில் சிவாஜி குடும்பத்தினர் இறங்கவும், Ôஅவர்களுக்கு உதவ வேண்டியது ஒவ்வொரு நடிகனின் கடமைÕ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆதங்கப்பட்டிருக்கிறார் ரஜினி. இந்த நிலையில், ‘சிவாஜி புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்தின் ஐம்பதாவது படத்தை பிரபுவை வைத்தோ சிவாஜியின் பேரனும் ராம்குமாரின் (சிவாஜியின் மூத்த மகன்) புதல்வருமான Ôஜூனியர் சிவாஜிÕயை வைத்தோ தயாரிக்க முடிவு செய்தார்கள். இதைக் கேள்விப்பட்டதும் ரஜினி நிமிர்ந்தார். சிவாஜி புரொடக்ஷன்ஸில் தான் நடித்து பெரும் வெற்றிப் படமாக அமைந்த ‘மன்னன்’ படத்தின் வெற்றிவிழாவில் சிவாஜிக்கும் தனக்கும் நடந்த ஒரு உரையாடல் ரஜினியின் நினைவில் நிழலாடியிருக்கிறது. ‘இதே தயாரிப்பு நிறுவனத்தின் ஐம்பதாவது படத்திலும் நான் நடிப்பேன்Õ என்று உணர்ச்சிகரமாக அப்போது சிவாஜிக்கு வாக்குறுதி அளித்திருந்தார் ரஜினி.
பி.வாசு

ரஜினியின் ஆரம்பகட்ட வளர்ச்சி நாட்களில், அவரது சொந்த வாழ்க்கையில் சில சங்கடங்கள் வந்தபோது ஒரு தந்தையைப் போன்ற உரிமையுடன் அவருக்கு ஆறுதலும் வழிநடத்தலும் தந்தவர் சிவாஜி. அந்த வகையில் அவருக்கு தான் ரொம்பவே நன்றிக்கடன் பட்டிருப்பதாக நெருக்க மானவர்களிடம் அடிக்கடி சொல்வார் ரஜினி. சிவாஜிக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவும், அவருக்குப் பட்ட நன்றிக்கடனை அடைக்கவும் தானாகவே முன்வந்து இந்த ஐம்பதாவது படத்தில் நடித்துக் கொடுக்கச் சம்மதித் திருக்கிறார்ÕÕ என்று சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

இதையே இன்னொரு தரப்பினர், ÔÔரஜினி ஒரு படத்தில் நடித்துக் கொடுத்தால் பிரச்னைகளிலிருந்து முற்றிலுமாக மீண்டு விடலாம் என்று சிவாஜி குடும்பத்தினர் நினைத்தனர். ஆனால், வெளி படங்களில் அவர் நடிப்பாரா என்ற தயக்கம் இருந்தது. சிவாஜியின் துணைவியார் கமலா அம்மாள் ரஜினிக்கு போன் செய்து இதுபற்றிக் கேட்க, ரஜினி மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக்கொண்டார்ÕÕ என்கிறார்கள் இவர்கள்.

Ôமன்னன்Õ படத்தை இயக்கிய பி.வாசுவின் Ôசந்திரமுகிÕயில் நடிப்பது என்று ரஜினி தீர்மானித்தது பற்றி கோடம்பாக்க வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம்.

‘‘ரஜினி பெங்களூர் போயிருந்த சமயம் கன்னட நடிகர் விஷ்ணுவர்த்தன், தான் நடித்த ‘ஆப்த மித்ரா’ என்ற படத்தைப் பார்க்க அழைத்தார். அதை இயக்கியவர் பி.வாசு. மலையாளத்தில் ‘மணிச்சித்திர தாழ்’ என்ற பெயரில் பத்தாண்டுகளுக்கு முன் வெளியான படத்தின் கன்னட பதிப்புதான் ‘ஆப்த மித்ரா’. அந்தக் கதையும் அதை இயக்கிய விதமும் ரஜினிக்குப் பிடித்திருந்தது. அதை அப்படியே மனதில் ஊறப் போட்டிருந்த ரஜினி, சிவாஜி புரொடக்ஷன்ஸில் நடிக்க முடிவெடுத்தவுடன், பி.வாசுவை அழைத்துப் பேசிவிட்டு, Ôஆப்த மித்ராÕ படத்துக்கான Ôரைட்ஸ்Õஸையும் வாங்கச் சொல்லியிருக்கிறார். Ôஜக்குபாய்Õ படத்தை இப்போதைக்கு(?) மறந்துவிட்டு, Ôஆப்த மித்ராÕ கதைக்கு தமிழில் Ôசந்திரமுகிÕ என்று தானே ஒரு பெயரும் சூட்டியிருக் கிறார்ÕÕ என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

இயக்குநர் பி.வாசுவிடம் பேசினோம். ÔÔநான் ஏற்கெனவே Ôமன்னன்Õ, Ôஉழைப்பாளிÕ ஆகிய படங்களில் ரஜினியை இயக்கி இருக்கிறேன். அந்த வகையில் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறோம். சமீபத்தில் பெங்களூரிலிருந்து என்னிடம் பேசினார் ரஜினி. Ôஉன்னோட Ôஆப்த மித்ராÕ பார்த்தேன்பா. பிரமாதம். ஆழமான சென்டிமெண்ட்டும் விறுவிறுப்பான திரைக்கதையும் இருந்தா போதும், கலக்கிடலாம்னு நிரூபிச்சிருக்கே’ என்றார். அவர் சென்னைக்கு வந்ததும் போய்ப் பார்த் தேன். Ôஇப்படி ஒரு கலகலப்பான படத்தில் நடிக்கணும்னு நினைச்சிக்கிட்டிருக்கேன். ஆனால், எல்லோரும் என்னிடம் சீரியஸான சப்ஜெக்ட்களையே சொல்றாங்கÕ என்றவரிடம், ‘நீங்களே இதைத் தமிழில் நடிச்சுக் கொடுக்கலாமேÕனு சிரிச்சுக்கிட்டே கேஷ§வலாக் கேட்டுட்டு வந்துட்டேன். அடுத்த சில நாளில் பார்த்தா, பிரபுவோட போன்! Ôஎங்க கம்பெனியோட ஐம்பதாவது படத்துல ரஜினி சார் நடிக்க சம்மதிச்சிருக்கார். நீங்கதான் டைரக்டர்Õனு சொன்னார். எதிர்பாராத இன்ப அதிர்ச்சிÕÕ என்ற பி.வாசுவிடம், ‘தமிழுக்காக, ரஜினியின் இமேஜுக்காக கதையை நகாசு பண்ணுவீர்களா?’ என்று கேட்டோம்.

ÔÔபடத்துல கண்டிப்பா அரசியல் இல்லை. இது முழுக்க ஜாலியான படம். குழந்தையிலயிருந்து, குடுகுடு தாத்தா வரைக்கும் எல்லாரையும் தியேட்டருக்கு இழுக்கற கதை. ரஜினிக்குள் இருக்கற படுஜாலி மனுஷனை ரொம்ப நாள் கழிச்சு மறுபடி வெளியில கொண்டுவரப் போகிறது இந்தப் படம். அதேசமயம் ஆக்ஷனுக்கும் பஞ்சமிருக்காதுÕÕ என்று மட்டும் சொன்னார் பி.வாசு.

‘ஆப்தமித்ரா’ படத்தில் ரமேஷ் அர்விந்த் ஏற்று நடித்த கேரக்டரை தமிழில் பிரபு செய்யப் போகிறார். சௌந்தர்யாவின் (இறப்பதற்கு முன் கன்னடத்தில் அவர் நடித்த கடைசிப் படம்) கேரக்டரில் அநேகமாக சிம்ரன் நடிக்கலாம் என்கிறார்கள். சமீபத்தில் சிம்ரனுக்கு ‘குட்லக்’ ப்ரிவியூ தியேட்டரில் கன்னட படத்தைப் போட்டுக் காட்டியிருக்கிறார்கள். இவர் ரஜினிக்கான ஜோடி அல்ல என்று சஸ்பென்ஸ் வைப் பவர்கள், ரஜினியின் ஜோடியாக ஜோதிகா அல்லது சினேகா நடிக்கலாம் என்று சொல்கிறார்கள்.

அக்டோபர் ஒன்றாம் தேதி, சிவாஜி பிறந்தநாள். அன்று அவருடைய வீட்டில் Ôசந்திரமுகிÕ பட பூஜை! மறுபடி ரஜினி படம் என்ற ஒரேயரு அறிவிப்பி லேயே பல வணிக விசாரணைகள் ஆரம்பமாகிவிட, உற்சாகமாக இருக்கிறது சிவாஜி குடும்பம்.

ரஜினி டிராக் மாறிப் போய்விட்டதால் ‘ஜக்குபாய்’ படத்தின் கதி என்னாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ÔÔஇதை கே.எஸ். ரவிக்குமார் இயக்குவார் என்று அறிவிப்புகள் வந்தன. அவர் படங்களை இயக்காமல் ஓய்வாக இருந்து நாங்கள் பார்த்ததில்லை. எப்போதுமே தன்னை பிஸியாக வைத்துக்கொள்வார் ரவிக்குமார். ஆனால் ரஜினிக்கு படம் எடுக்கப் போகிற ஆர்வத்தில் இடையில் வந்த பல வாய்ப்புகளை ஒதுக்கிவிட்டு, சதாநேரமும் Ôஜக்குபாய்Õ பற்றிய சிந்தனையிலேயே இருந்தார். ரஜினியுடன் பல நாட்கள் கதை விவாதத்திலேயே கழித்தார். Ôஜக்குபாய்Õ படத்தின் கதை என்ன என்று ஆளாளுக்குப் பல ஊகங்களை வெளியிட்டபோதெல்லாம், மறுப்பும் விளக்கமும் கொடுத்துக் கொண்டிருந்தார்.

தீவிர கதை விவாதத்துக்குப் பிறகு கே.எஸ்.ரவிக்குமார் ஸ்கிரிப்ட்டைத் தயார் செய்து கொடுத்தார். ரஜினியோ, Ôஇன்னும் ஃபோர்ஸா இருக்கணும், ரவிÕ என்று மேலும் மேலும் திருத்தங்கள் சொல்லிக்கொண்டே இருந்தார். இப்போது ரவிக்குமார் Ôசந்திரமுகிÕ அறிவிப்பு பற்றி என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லைÕÕ என்று அவரது நண்பர்கள் சொல்ல, நாம் ரவிக்குமாரிடமே பேசினோம்.

‘‘ரஜினியின் புதுப்பட அறிவிப்பை செய்தித் தாள்களில்தான் நானும் பார்த்தேன். மற்றபடி, Ôஜக்குபாய்Õ படம் பற்றி எதையும் ரஜினி சொல்லவில்லை. இப்போதும் Ôஜக்குபாய்Õ பட விவாதத்தில் என் உதவியாளர்களுடன் பிஸியாக இருக்கிறேன். அடுத்த சில நாட்களில் அதுபற்றி இன்னும் தெளிவு பிறக்கும்’’ என்று முடித்துக் கொண்டார் கே.எஸ்.ரவிக்குமார்.

சமீபத்தில் மதுரை விழா ஒன்றில் கலந்துகொண்ட சிம்ரன், தான் ரஜினி படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, Ôதிருமணத்துக்குப் பிறகு நடிப்புக்கு சிறு இடைவெளி விட்ட சிம்ரன் மறுபடி நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறார்Õ என்று செய்திகள் வந்தன. கூடவே, Ôஅவர் இப்போது கர்ப்பமாக இருக்கிறார். உடனடியாக படம் எதிலும் நடிப்பது சாத்தியமில்லைÕ என்றும் ஒரு செய்தி பரவி, ரசிகர்களைக் குழப்பியது.

இதுபற்றி நாம் விசாரித்தபோது, Ôஒரு குளிர்பான நிறுவனத்துடன் ஐந்து வருடங்களுக்கு சிம்ரன் காண்ட்ராக்ட் போட்டிருக்கிறார். அதன் அடிப்படையில் சிம்ரன் தொடர்ந்து விளம்பரப் படங்கள் நடித்துக்கொடுக்க வேண்டும். இடையே கர்ப்பம் ஆகக்கூடாது என்பதும் அந்த காண்ட்ராக்ட்டின் ஒரு ஷரத்து. எனவே, சிம்ரன் கருவுற்றிருக்கிறார் என்று வரும் செய்திகள் சரியாக இருக்க முடியாதுÕÕ என்கிறார்கள் சிம்ரன் வட்டாரத்தில்.

Courtesy : Junior Vikatan
http://www.vikatan.com/jv/2004/oct/03102004/jv0601.htm

No comments: