Sunday, October 03, 2004

`சந்திரமுகி' படத்தில் ரஜினியுடன் சிம்ரன் ஜோடி சேர்ந்தார்

சென்னை, அக். 3-

`சந்திரமுகி' படத்தில், ரஜினி காந்துக்கு ஜோடியாக சிம் ரன் நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியை மும்பையில் தேடுகிறார்கள்.

`சந்திரமுகி'

ரஜினிகாந்த் 2 வருட இடை வெளிக்குப்பின், மீண்டும் சினிமாவுக்கு திரும்பி இருக்கிறார்.

அவர் நடிக்கும் புதிய படத்தின் பெயர், `சந்திரமுகி'. இந்த படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.

மோகன்லால் நடித்த `மணிச்சித்ரதாள்' என்ற மலையாள படத்தை தழுவி, `சந்திரமுகி'யின் கதை அமைக்கப்பட்டிருப்பதாக, சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.

இதுபற்றி டைரக்டர் பி.வாசு விடம் `தினத்தந்தி' நிருபர் கேட் Öர். அதற்கு பதில் அளித்து பி.வாசு கூறியதாவது:-

பேய் கிடையாது

``சந்திரமுகி, மணிச்சித்ரதாள் படத்தை தழுவிய கதை அல்ல. அது, ஒரு பேயையும், பேய் ஓட்டுபவரையும் பற்றிய கதை.

இது வேறு கதை. இதில் பேய் கிடையாது. ரஜினிகாந்த் பேய் ஓட்டுபவரும் அல்ல.

`மணிச்சித்ரதாள்' படத்தில் மோகன்லால், இடைவேளை சம யத்தில்தான் `என்ட்ரி' ஆவார்.

ரஜினியை அப்படி காட்டினால், ரசிகர்கள் ஏற்றுக்கொள் வார்களா?

`சந்திரமுகி' படத்தின் கதை, என் பெயரில் வருகிறது. `மணிச்சித்ரதாள்' படத்தை திரும்ப எடுத்தால், ``கதை: பி.வாசு'' என்று போட முடியுமா?

வதந்தி

வதந்தி பரப்புபவர்களை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

``அவர்கள் வேலையை அவர்கள் செய்யட்டும். நம் வேலையை நாம் செய்வோம்'' என்று ரஜினி சார் சொல்லிவிட்டார்.

``தலைவர் படத்துக்குப் போய் `சந்திரமுகி' என்று ஒரு பெண் ணின் பெயரை டைட்டிலாக வைத்து இருக்கிறீர்களே?'' என்று ஒரு ரசிகர் என்னிடம் ஆதங்கப் பட்டார்.

எம்.ஜி.ஆர். புகழின் உச்சத்தில் இருந்தபோதுதான் `மகாதேவி' என்ற படத்தில் நடித்தார். அவருடைய சொந்த படத்துக்கு `அடிமைப்பெண்' என்று பெயர் சூட்டினார்.

சிம்ரன்

`சந்திரமுகி'யில் 2 கதாநாயகி கள் இருக்கிறார்கள். அதில் ஒரு கதாநாயகியாக சிம்ரன் ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டார்.

இன்னொரு கதாநாயகியை தேடி வருகிறோம். அனேகமாக அது மும்பையை சேர்ந்த புதுமுகமாக இருக்கலாம்.''

இவ்வாறு பி.வாசு கூறினார்.

Courtesy : Thina Thanthi
http://www.dailythanthi.com/article.asp?NewsID=141066&disdate=10/3/2004

No comments: