Thursday, January 20, 2005

குமுதம் : ரஜினி அப்படியே இருக்கிறார்!‘‘சந்திரமுகி படத்தின் வேலைகள் ரொம்ப வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. ரஜினியைப் பொறுத்தவரை உற்சாகமாக முழு ஈடுபாட்டுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். தினமும் அவர்தான் எங்கள் எல்லோருக்கும் முன்பாக லொக்கேஷனுக்குப் போய் காத்துக் கொண்டிருப்பார். ஆனால் ஜோதிகா, ரஜினிக்கு முன்னால் மேக்கப்புடன் லொக்கேஷனில் தயாராக இருக்கிறார். என்னோட இத்தனை வருட அனுபவத்தில் இதுபோல் ஒரு சின்சியரான நடிகையை நான் பார்த்ததில்லை. ரியலி சூப்பர்ப். ஒவ்வொரு முறையும் நடித்து முடித்ததும் ‘நான் நல்லா நடிச்சிருக்கிறேனா, காட்சி நன்றாக வந்திருக்கிறதா? இல்லை ஒன் மோர் டேக் போகலாமா?’ என்று பயபக்தியுடன் கேட்டுக்கொள்கிறார். அதனால்தான் அவரால் நல்ல பெயரெடுக்க முடிந்தது என்று நினைக்கிறேன்’’ என்று உற்சாகமாக சொல்ல ஆரம்பித்தார் பிரபு. சந்திரமுகி ஷ¨ட்டிங் இரவு முழுவதும் முடிந்து அதிகாலை வீடு திரும்பியிருந்தார்.

‘‘என் அப்பா நடிகர் திலகம் சிவாஜிகணேசன் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் ஏற்று படம் பார்க்கும் மக்களிடம் ஓர் எதிர்பார்ப்பை உண்டு பண்ணிவிடுவார். அந்த எதிர்பார்ப்பு கமலுக்கு உண்டு என்று அப்பாவே என்னிடம் சொல்லியிருக்கிறார். அப்பா எப்படி அந்த கேரக்டருக்காக மெனக் கெட்டாரோ அந்த இயல்பு அப்படியே கமலிடம் இருக்கிறது. இதைக் கண்டு நாங்கள் எல்லோருமே ஆச்சரியப்பட்டிருக்கிறோம்.


அப்பா ஒருமுறை ராம்குமார் அண்ணனிடம், ‘உங்களை விட அதிகம் என் மடியில் உட்கார்ந்தது கமல்தான். எனக்கு கமலும் ஒரு பிள்ளைதான்’ என்று சொல்லியிருக்கிறார். நாங்கள் பெங்களூரில் பிஷப் கார்ட்டன் பாய்ஸ் ஹைஸ்கூலில் படித்துக் கொண்டிருக்கும்போது அங்குள்ள ஹாஸ்டலில்தான் தங்கினோம். கமல் குழந்தை நட்சத்திரமாக அப்பாவுடன் பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போது அவர் மடியில் ஏறி இறங்கி விளையாடியிருக்கிறார். இந்த பாக்கியம் எங்களுக்கெல்லாம்கூட அவ்வளவாக கிடைக்கவில்லை. காரணம், நாங்கள் குழந்தையாக இருக்கும்பொழுதே அப்பா அம்மாவை விட்டுப் பிரிந்து வெளியூரில் தங்கிப் படிக்கப் போய்விட்டோம். அதனால், கமல் எங்கள் வீட்டில் பிறக்காத மூத்த பிள்ளை. நான் இப்போதும் அவரை அண்ணா என்றுதான் அழைத்துக்கொண்டிருக்கிறேன்.

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கமல் என்னை அழைத்து வாய்ப்புக் கொடுத்தார். சந்திரமுகி படத்தில் ரஜினி, ‘பிரபு, நீங்களும் நானும் சேர்ந்து நடிக்கிறோம் என்ன சொல்றீங்க’ என்றார். கரும்பு தின்னக் கூலி வேண்டுமா என்று அவரிடமே சொன்னேன்.

ரஜினி மீது அப்பாவுக்கு மரியாதை, பாசம் எல்லாம் உண்டு. ரஜினியைப் பற்றி அவர் எப்போது பேசினாலும் உழைப்பால் உயர்ந்திருக்கிறார். எதிலும் அவரிடம் வைராக்கியமும், ஈடுபாடும் செவ்வனே இருக்கிறது. அதனால் அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று பலமுறை ஒருதீர்க்கதரிசி போல் சொல்லியிருக்கிறார். ‘படையப்பா’ படப்பிடிப்பின்போது அப்பாவுக்கு முன்பே சீக்கிரமே லொக்கேஷனுக்கு போய்விடுவார் அப்பா. இதைப் பார்த்து பிரமித்துப் போயிருக்கிறார். இப்போதும் ரஜினி அப்படியே இருக்கிறார். அவருக்கு இருக்கும் பெயருக்கும், புகழுக்கும் இது அவசியமில்லை. அவர் எப்போது வந்தாலும் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள்.


சிவாஜி புரொடக்ஷனில் இதற்கு முன்பு ‘மன்னன்’ படத்தில் ரஜினி நடித்தார். அப்போது என்னிடம், ‘மன்னன் படம் நன்றாக ஓடினால் இன்னொரு படம் நிச்சயம் உங்கள் பேனருக்கு செய்வேன்’ என்றார். மன்னன் படம் நன்றாக ஓடியது. அதனால், அப்போது சொன்னதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு பதினெட்டு வருடம் கழித்து ‘சந்திர முகி படத்தைத் தயாரியுங்கள். அதில் நான் நடிக்கிறேன்’ என்று சொன்ன சொல்லை தவறாமல் காப்பாற்றியிருக்கிறார். அதுதான் ரஜினி.

என்னை ‘புரொடியூசர் சார்’ என்று அழைத்து முதுகில் தட்டி கிண்டல் செய்து லொக்கேஷனில் ஜாலியாக இருப்பார். அவரிடம் ஹியூமர் சென்ஸ் நிறைய உண்டு. அது அவரிடம் பழகியவருக்கு மட்டுமே தெரியும்.

ரஜினி சமீபத்தில் என்னிடம் என் அம்மாவைப் பற்றி பேசும்போது அம்மாவின் நெற்றியில் பெரிய பொட்டு இருக்கும். ‘முகத்தில் சிரிப்பும், நல்ல உபசரிப்பையும் பார்த்துப் பழக்கப்பட்ட எனக்கு இந்த களையான முகத்தில் பொட்டு இல்லாமல் இருப்பதைப் பார்க்க கஷ்டமாக இருக்கிறது’ என்றார். அந்த அளவுக்கு எங்கள் குடும்பத்துடன் ரொம்ப நெருக்கமாகப் பழகியிருக்கிறார். இந்த நட்பு கிடைத்தது, அவர் சிவாஜி புரொடக்ஷனுக்கு படம் பண்ணுவது எல்லாம் நாங்கள் செய்த அதிர்ஷ்டம்.’’ என்று முடித்தார் பிரபு.

_ சந்துரு
படங்கள்: சந்திரமுகி படத்திலிருந்து.

Monday, January 17, 2005

விகடன் : வித்யாசாகரின் துள்ளல்!

Ôவர்ஷா வல்லகி’... என் இசைக்கூடம்...

இப்போதுதான் கம்போஸிங் அறையிலிருந்து வெளியே வருகிறேன். பால்கனியிலிருந்து பார்த்தால் தெருவெல்லாம் ரசிகர் கூட்டம். உள்ளே ‘சந்திரமுகி’ படத்தின் பாடல் தயாராகிறது. ரஜினியின் ரகசிய வருகை வெளியே பரவி, அவர் தரிசனத்துக்காக ஒரு கூட்டம் காத்திருக்கிறது.
ÔÔஹேப்பி வித்யா!ÕÕ


‘‘ஹேப்பி... இது பெரிசா ஹிட்டாகும் வித்யா!’’ |உற்சாகமாக வாலி, பி.வாசு, ராம் குமாருடன் கிளம்பிப் போகிறார் ரஜினி. வாசலில் பரபரப்பு... விசில் ஒலிகள். மின்னலென வெளியேறி, ஒரு பளிச் புன்னகையுடன் கூட்டத்தைக் கும்பிட்டுவிட்டு, காரிலேறிப் பறக்கிறார் ரஜினி.ஒரு விழாவில் தற்செயலாக டைரக்டர் பி.வாசு சாரைப் பார்த்தேன். Ô‘உங்களுக்கு ஒரு குட் நியூஸ் இருக்கு’Õ எனச் சிரித்துவிட்டுப் போனார். பிறகு, அதை நானும் மறந்து போய்விட்டேன். ஒருநாள் ராம்குமார் என் ஸ்டூடியோவுக்கு வந்திருந்தார். ÔÔசிவாஜி ஃபிலிம்ஸ§க்கு இது 50|வது வருஷம். ஒரு புதுப் படம் பண்றோம். பிரபு நடிக்கிறார். நீங்க மியூஸிக் பண்ணணும்...’’ எனச் சொல்லிக்கொண்டே வந்தார். ‘‘சந்தோஷமா செய்யலாம் சார்’’ என்றேன். ஒரு சின்னப் புன்னகையுடன் என்னைப் பார்த்தவர், ‘‘ஹீரோ ரஜினிகாந்த்!ÕÕ என்றார். எனக்கு அது மிகப் பெரிய சர்ப்ரைஸ்!


நான் ரஜினி சாரை முதலில் சந்தித்ததே ‘அன்னை இல்ல’த்தில் நடந்த ‘சந்திரமுகி’ பட பூஜையில்தான். ‘வித்யாசாகர்’னு யாரோ என்னைக் கூப்பிட்டார்கள். மெதுவாகத் திரும்பிப் பார்த்தால், ரஜினி சார்! ÔÔவணக்கம் வித்யாசாகர். உங்களுக்குத்தான் இதில் ரொம்ப வேலையிருக்கு. உங்க ஸ்டூடியோவுக்கு நானே வர்றேன். நிறைய பேசணும்ÕÕ என்று சிரித்தார்.

சந்திரமுகிக்கு வேறு யாரோதான் மியூஸிக் பண்ணுவதாக இருந்ததாம். ஆனால், ரஜினி சார்தான் என்னைத் தேர்ந்தெடுத்தாராம். ‘‘என் பொண்ணுங்க, அவங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாம், Ôவித்யாசாகர்’னு உங்க பேர் சொன்னதுமே சந்தோஷத்துல தலைகால் தெரியாம துள்றாங்க. அப்படி என்னதான் மாயம் பண்றீங்க?ÕÕனு சிரிச்சார் ரஜினி.

சிம்பிளா இருக்கார். காஷ§வலாப் பழகுறார். ரொம்ப வேகம். இப்பப் பாருங்க, ÔசடசடÕனு மூணு பாட்டு கம்போஸ் ஆயிருச்சு. மாஸ் ஹீரோன்னாலே ரஜினி தான்! ஹீரோயிஸத்துக்கான பில்டப் அவர் படங்களில்தான் பிரபலமாக ஆரம்பிச்சுது.

ஆனால், ‘சந்திரமுகி’ படப் பாடல்களில், அரசியல் சங்கதி, தனிமனிதப் புகழ்ச்சி மாதிரி வழக்கமான விஷயங்கள் வேண்டாம் என்று முடிவு பண்ணிட்டார் ரஜினி சார். இப்போ சின்ன நடிகர்கள்கூட ஹீரோயிஸம்தான் வேணும்னு எதிர்பார்க்கிறப்போ, அந்த ஃபார்முலாவை ரஜினி சாரே பிரேக் பண்றது ரொம்ப ஆரோக்கியமான விஷயம்.

ஓபனிங் சாங் வாலி சார் எழுதறார். சின்ன இடைவெளிக்குப் பிறகு ரஜினி சார் மறுபடியும் ஸ்கிரீன்ல வந்து நிக்கறப்போ, இடி, மின்னல், புயல், மழைனு போட்டுத் தாக்கற ஸ்டைல்ல வரும் பாட்டு. ஒரு வேகத்தோட காத்திருக்கிற அத்தனை ரஜினி ரசிகர்களுக்கும் அது அர்ப்பணம்!

ரஜினி சார் ரொம்ப மாடர்னா யோசிக்கிறார். அவரிடம் ஒரு நல்ல விஷயம் என்னன்னா, தன் கருத்தை யார் மீதும் அவர் திணிப்பதில்லை. என்ன விஷயம்னாலும் கவனமாகக் கேட்கிறார். ஏன் அதைச் செய்ய விரும்பறோம்னு தெரிஞ்சுக்க விரும்பறார். அப்படியே வெளிப்படையா மனசைத் திறந்து வெச்சிருக்கிறார். ‘இந்தப் பாட்டுக்கு யார் டான்ஸ் மாஸ்டரா இருந்தா நல்லாயிருக்கும்?’னு என்னோட அபிப்பிராயம் கேட்கிறார். அவ்வளவு ஆர்வமா, கவனமா ஒரு திருவிழாவுக்குத் தயாராகிறார் ரஜினி சார்.

ஆக்ஷன் தவிர, இது மியூஸிக்கலான சப்ஜெக்ட். படத்தின் ரீ& ரிக்கார்டிங் லண்டனில் பண்ணப்போறோம். Ôசந்திரமுகிÕக்கு சூப்பர் ஸ்டார் இருக்கார். அந்தப் பலமே பெரிய கமர்ஷியல். அதை மியூஸிக்ல அழகுபடுத்த வேண்டிய பொறுப்பு மட்டும் என்னுடையது. அதனோட மதிப்பு எனக்குப் புரியுது. இரண்டு நாட்களுக்கு முன்னால் பாண்டி பஜார் அருகே காரில் வந்துகொண்டிருந்தேன். சரேலென என் காரை ஓவர்டேக் செய்து ஒரு கார் குறுக்கே வந்து நின்றது. காரிலிருந்து இறங்கி வந்தவர், ஒரு பெரிய அதிகாரி போல இருந்தார். ‘Ôகுட்மார்னிங் சார், ‘சந்திரமுகி’ பாட்டெல்லாம் ரெடியா?’’ என்றார். ‘Ôவேலை நடந்துட்டிருக்குங்க’Õ என்றேன். ‘Ôசூப்பரா குத்துப்பாட்டு போடுங்க சார்!’’ என்று சொல்லிவிட்டு, காரைக் கிளப்பிக்கொண்டு போய்விட்டார். எல்லா இடத்திலும் எல்லா ரகத்திலும் ரஜினி சாருக்கு ரசிகர்கள் இருக்காங்க.நானும் ரஜினி சார்கிட்டே இப்படி ஜனங்க எதிர்பார்க்கறதைச் சொல்லிட்டேன். ரொம்ப ஜாலியாச் சிரிச்சார். அவர் எல்லாத்துக்கும் ரெடியா இருக்கார். எனக்கு ரஜினி மீது இருக்கிற ஆச்சரியம் அவரோட எளிமை. என் ஸ்டூடியோவுக்கு அவர் வந்துட்டுப் போகும்போது சந்தோஷமாகப் போகிறார். அது எனக்கு நிறைவாக இருக்கு. பாடல்கள் பிரமாதமா வந்துட்டிருக்கு. செம திருவிழாவுக்குத் தயாரா இருங்க!

Friday, January 14, 2005

தினமலர் : சந்திரமுகி ஸ்பெஷல்

சந்திரமுகி ஸ்பெஷல்

சந்திரமுகி தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ரஜினி நடிக்கும் படம். சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்கும் படம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மூன்று கட்டம் முடிவடைந்து இம்மாதம் 15ம் தேதி முதல் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெறுகிறது. இதற்காக ஆர்ட் டைரக்டர் தோட்டாதரணி ஐந்து பிரமாண்டமான செட்டுக்களை போட்டுள்ளார். இதற்காக பல லட்சம் ரூபாய் செலவாகி உள்ளது.

* சந்திரமுகி படத்திற்காக இதுவரை மூன்று பாடல்கள் வித்யாசாகர் இசையில் ரிக்கார்ட் செய்யப்பட்டு மூன்று பாடல்களும் படப்பிடிப்பும் செய்யப்பட்டுவிட்டது. இந்த மூன்று பாடல்கள் முறையே வாலி, பா.விஜய், நா. முத்துக்குமார் ஆகியோர் எழுதி உள்ளனர். இந்த மூன்று பாடல்களை நடன அமைப்பாளர்கள் ராஜி சுந்தரம், பிருந்தா, தருண்குமார் ஆகியோர் அமைத்துள்ளனர். இதில் ஒரு பாடல் பெங்களூரிலும் மற்ற இரு பாடல்கள் மைசூர் அவுட்டோரிலும் படமாக்கப்பட்டது.

* சந்திரமுகி படத்தின் சண்டைக் காட்சிகள் சிவாஜி கார்டன் மற்றும் கும்மிடிப்பூண்டி அருகில் படமாக்கப்பட்டது. படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் தளபதி தினேஷ் மிகவும் சிரமமான காட்சிகளை அமைத்திருந்தார். விஜய், ஆந்திர நடிகர் மகேஷ்பாபு ஆகியோர் மட்டுமே செய்யும் கஷ்டமான காட்சிகளை டூப் இல்லாமல் ரஜினி செய்தாராம்.

* அந்தரத்தில் கம்பியில் தொங்குவது அதிலேயே பலமுறை சுற்றுவது போன்ற காட்சிகளில் ரஜினி கொஞ்சம் கூட யோசிக்காமல் செய்தாராம். இதைப் பார்த்த தயாரிப்பாளர் ராம்குமார் பதறி போய் ரஜினியிடம், "சார் டூப் போட்டுக் கொள்ளலாம்' என்று சொல்லியும் ரஜினி அன்புடன் மறுத்து விட்டார்.

* ரஜினியுடன் நடிக்க சண்டை நடிகர்கள் மூன்றாவது தலைமுறையை சேர்ந்தவர்களாம். இதில் சிவாஜிக்கு சண்டையில் குருக்களான ஸ்டண்ட் சோமு, சாரங்கன் ஆகியோர் பேரன்கள் நடிக்கின்றனர்.

* திட்டமிட்டு செயல்படுவதில் வாசுவுக்கு இணை வாசு தான். விடியற்காலை மூன்று மணி வரை படப்பிடிப்பு நடத்தி விட்டு காலை 9 மணிக்கு சிவாஜி பிலிம்ஸ் எடிட்டிங் கிற்கு அவர் வீட்டிலிருந்து நடந்தே வந்து விடுகிறார்.

* ரஜினியைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுமையை செய்கிறாராம். ஒவ்வொரு "ஷாட்' முடிந்ததும் டைரக்டரிடம் வந்து "ஓகே'வா இன்னும் கொஞ்சம் பெட்டரா செய்யவா என்று ஒரு புதுமுகம் கேட்டது போல் ஆவலாக கேட்கிறார். இதை படப்பிடிப்பில் உள்ள அனைவரும் சொல்லி பெருமைப்படுகின்றனர். மூன்று வருட இடைவெளியில் இவர் கொஞ்சம் கூட சோர்ந்து போகவில்லை என்று கூறுகின்றனர்.

* பிரபுவை பொறுத்தவரை இந்தப் படத்தில் ரஜினியின் உயிர் நண்பன். படத்தில் மட்டுமல்ல. இவருக்கு படப் பிடிப்பு இல்லாத நேரத்தில் கூட ரஜினியுடனேயே இருக்கிறார். குறிப்பாக, சண்டைக் காட்சிகளில் அவர் ரஜினி பக்கத்திலேயே இருக்கிறார்.

* சந்திரமுகி படத்திற்கு ராயப்பேட்டையில் உள்ள சிவாஜி பிலிம்சில் ஒரு எடிட்டிங் சூட் நிர்மாணிக்கப் பட்டுள்ளது. படப்பிடிப்பு நடந்த அன்றே அதன் எடிட்டிங் வேலை நடைபெறுகிறது. இதற்காக, சிவாஜி பிலிம்ஸ் இரவு பகல் இரண்டு நேரமும் விழாக் கோலமாக உள்ளது.

* சந்திரமுகி அனைத்து ஏரியாவும் அப்போதே விற்று விட்டது. அனைத்து வினியோகஸ்தர்களும் பொங்கலுக்கு சந்திரமுகி புளோஅப் கேட்டு அலைந்து கொண்டிருக்கின்றனர். அத்தனை பேரும் சென்னைக்கு வந்து படப்பிடிப்பை ஆவலுடன் பார்க்கின்றனர். ஏப்ரல் 14க்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.

* சந்திரமுகி மலையாளத்தில் வந்தது, கன்னடத்தில் வந்தது என்று பல பேர் பல வகையில் பேசிக் கொண்டாலும் தமிழில் முழுக்க முழுக்க கதை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாம். ரஜினிக்கு பல நகைச்சுவை, சண்டைக் காட்சிகள் புகுத்தப் பட்டுள்ளதாம். தாய்மார்கள் அனைவரும் தியேட்டருக்கு வந்து பார்க்கும் வகையில் தாய்குலத்திற்கேற்றார் போல் படம் அமைந்துள்ளதாம்.

* சந்திரமுகியில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது. ரஜினி, பிரபு, நாசர், வடிவேலு, விஜயகுமார், வினித், அவினாஷ், சோனுசுத், ஜோதிகா, நயன்தாரா, ஷீலா, மாளவிகா, கே.ஆர்.விஜயா, சுவர்ணா, வினயா பிரசாத் இன்னும் பலர் நடிக்கின்றனர்.

* ஒளிப்பதிவு: சேகர் பால், எடிட்டிங்: சுரேஷ் அர்ஸ், கலை: தோட்டா தரணி, சண்டைப் பயிற்சி: தளபதி தினேஷ். பாடல்கள்: வாலி, பா.விஜய், நா.முத்துக்குமார், நடனம்: ராஜி சுந்தரம், பிருந்தா, தருண்குமார்.

* சிவாஜி பிலிம்ஸ் சார்பாக ராம்குமார் பெரும் செலவில் தயாரிக்கும் சந்திரமுகியில் சிவாஜி குடும்பத்தின் மூன்றாவது தலைமுறை துஷ்யந்த். இந்தப் படத்தின் மூன்று தயாரிப்பு மேற் பார்வையும் பார்க்கிறார். தினமும் படப்பிடிப்பு சம்பந்தமானதை தனது பாட்டியிடம் வந்து கூறுகிறார். தாத்தா இருந்தால் தாத்தாவிடமே சொல்வேன் என்று கண் கலங்குகிறார் இந்த ஜூனியர் சிவாஜி.

* வரும் தமிழ்ப் புத்தாண்டு தமிழ் ரசிகர் பெருமக்களுக்கு கொள்ளை விருந்து தான்.

சந்திரமுகியில் பா.விஜய் பாடல்:

பல்லவி1

அத்திந்தோம்

திம்தீம்தோம் தன

திந்தாதிருந்தோம்!

ககதிந்தோம்

திம்தீம்தோம் தன

திந்தாதினந்தோம்

ஆடாத ஜவ்வாது மலை

ஆடிடும் பொம்மி!

ஆண்டவன தாலாட்டும் இசை

கேளடி பொம்மி!

எம்பாட்டு வந்தாலே மனம்

துள்ளிடும் பொம்மி?

அவன் பாட்டு இல்லாத இடம்

எங்கடி பொம்மி?

முக்கண்ணன்

முத்தாக தந்த

பாட்டுப் படிச்சேன்!

பாட்டிலே

பல கோடி நெஞ்ச

நானும் புடிச்சேன்!

சரணம்1

வட்ட வட்ட

மொட்டுகளைத்

தட்ட தட்ட

வந்ததம்மா

நதிக்காத்து! ஓ..

மொட்டு மொட்டு

மெல்ல மெல்ல

மெட்டு மெட்டு

கட்டுதம்மா

சுதி பாத்து! ஓ..

சுதி பாத்து

ஆட வைக்கணும் பாட்டு சும்மா

அசைய வைக்கணும் பாட்டு!

கேட்க வைக்கணும் பாட்டு நல்லா

கெறங்க வைக்கணும் பாட்டு!

இந்த பாட்டுச் சத்தம்

கேட்டு சுத்தும்

பூமி எப்போதும்!

சரணம்2

சின்னச் சின்ன

தொட்டில் கட்டி

அம்மா சொல்லும்

ஆராரிரோ

இசை தானே! ஓ

இசை தானே!

ஆணும் பொண்ணும்

கட்டில் கட்டி

ஆச மெட்டுக்

கட்டுறதும்

இசை தானே!ஓ

இசை தானே!

ஆறு மனமே ஆறுஇங்க

அனைத்தும் அறிந்த தாரு?

அறிவைத் திறந்து பாரு அதில்

இல்லாதத சேரு!

அட எல்லாந் தெரிஞ்ச

எல்லாம் அறிஞ்ச

ஆளே இல்லையம்மா...


Courtesy : http://www.dinamalar.com/cinema/cine_news.asp

Thursday, January 13, 2005

New Get Up of Rajini!

The latest information about Chandramuki is about the different 'get
up' of Rajini.

He is one among the very few actors, who don't change his get up
much. But all of a sudden, he acts few scenes in Chandramuki in a
different 'get up'. We can understand your eagerness to know more
about the get up in detail!

In the film Chandramuki, Rajini had returned to his old younger self
with the help of Make-up artiste from a foreign country. The costume
designer of Raniji is also a foreigner.

According to the story of Chandramuki, Rajini needs to appear in
different getups. So, they had tested many different get ups on
Rajini. He had okayed a particular getup.

A Small beard in the chin and 'kudumi' on the head, with old type
drama artiste's costume to go with. He didn't acted in this get up
so far in his films. Rajini had strictly given the instruction to
the film unit not to reveal this get up to the public through
magazine and dailies.

But we have given you the news in advance. Photos will follow very
soon.

Sunday, January 09, 2005

Rajinikanth escapes injury

The shooting of the film “Chandramukhi” has gained momentum and the expectations for the film has raised tremendously.

A song sequence for “Chandramukhi” was filmed in Bangalore. Rajini was asked to dance for a tough movement by Rajasundaram who is the dance master for this film.

Rajini enthusiastically danced for that particular sequence during which he lost his equilibrium. But he managed to balance without falling else he would have got injured. Rajasundaram approved that sequence and the song was filmed without any interruption.

Meanwhile, Trust Rajnikanth to say it like it is.

Yesterday, the superstar handed the cheque for Rs.21 lakh for
tsunami relief to Tamil Nadu Chief Minister J Jayalalithaa.

But coming out after meeting Jayalalithaa, the super star minced no
words and warned those who were shortchanging on the money meant for
public relief.

Right words at the right

Courtesy : Behindwoods.com

Disappearing Rajini; Terrified Vadivelu

Vadivelu is one hell of a lucky guy. From the day he started acting,
as a comedian there is no significant let up in his career so far.
Now he is acting with Rajini in 'Chandramuki'.


In the earlier film of Rajini 'Muthu' Vadivelu would come only in
three scenes. Even in those three scenes he was able to make his
presence felt. In one particular scene, Rajini would turn around and
look, and Vadivelu would just fell down and will ask is fear "Hey
what's happening?" - Rajini would answer coolly "I just turned and
looked" that's all", Vadivelu will shiver in fear.


The same kind of comedy is continuing in 'Chandramuki' also. For
example, Vadivelu will be riding a bicycle Rajini will be sitting in
the carrier seat, Vadivelu would ask him,


"What kind of film we are going to see now?" Rajini will answer
casually, "Ghost film". Vadivelu would object, "What, ghost film, I
don't like those films, let us go to some love or sentiment film or
else I will turn back now". He won't get any answer at all from the
back. "Hey, what yaar, I have been talking, but you are just sitting
there with out saying anything, what do I to understand from that?"


While he was telling this. Rajini will look out from a car coming in
the opposite direction and will call him " Hai Murugesa, where are
you going? Vadivelu would shudder with fear on seeing this. How come
a person who was sitting in the back seat can come in from the
opposite direction, that too in a car! He just turn around and will
rush towards the village in utter fear. Throughout the film, scenes
like this are strewn all around. You may be eager to know more about
such scenes, right? Please wait till the film hits the screens.

http://www.cinesouth.com/masala/hotnews/new/07012005-6.shtml